டிஸ்ஃபங்சனல் யூட்ரைன் பிளீடிங் எனும் பாதிப்பிற்கான நிவாரண சிகிச்சை

15 Aug, 2025 | 01:10 PM
image

இன்றைய திகதியில் இளம் பெண்களும், பெண்மணிகளும் தங்களது வாழ்க்கை நடைமுறையையும், உணவு முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதால் அவர்களுடைய மாதவிடாய் சுழற்சியில் சீரற்ற தன்மை ஏற்படுகிறது. அத்துடன் சிலருக்கு திடீரென்று ரத்தப்போக்கு உண்டாகும்.

இத்தகைய நிலைப்பாட்டை மருத்துவ மொழியில் டிஸ்ஃபங்சனல் யூட்ரைன் பிளீடிங் என குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிலருக்கு மாதவிடாய் சுழற்சி தருணங்களில் இயல்பான அளவை விட கூடுதலான ரத்தப்போக்கு ஏற்படக்கூடும். சிலருக்கு மாதவிடாய் சுழற்சி சீரற்றதாக இருக்கும். சிலருக்கு இயல்பாக வரவேண்டிய மாதவிடாய் சுழற்சி வழக்கத்திற்கு மாறாக விரைவில் வரக்கூடும். இத்தகைய பாதிப்புடன் ரத்தப்போக்கும் இருந்தால் அதைத்தான் மருத்துவ மொழியில் டிஸ்ஃபங்க்ஷனல் யூட்ரைன் பிளீடிங் என குறிப்பிடுகிறார்கள்.

இவர்களை பரிசோதிக்கும் போது கர்ப்பப்பை மற்றும் கருவகத்தில் எந்த நீர்கட்டிகளும், குறைபாடுகளும் இருப்பதில்லை. இவர்களுடைய ஹோர்மோன் சுரப்பியில் ஏற்படும் சமசீரற்றத்தன்மை காரணமாகவே இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

இத்தகைய பாதிப்பு பெரும்பாலும் மாதவிடாய் சுழற்சி அண்மையில் தொடங்கி இருக்கிறது என்பவர்களுக்ககோ அல்லது மாதவிடாய் சுழற்சி நிறைவடையும் தறுவாயில் உள்ளவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவது அதிகம்.

இவர்கள் வைத்திய நிபுணர்களை சந்தித்து சிறுநீர் மற்றும் குருதி பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஹோர்மோன் சுரப்பியின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்வதற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை அளிப்பார்கள்.

வைத்தியர் சுபாஷிணி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48
news-image

அகில்லெஸ் டெண்டினிடிஸ் எனும் காலில் ஏற்படும்...

2026-07-01 16:08:31