ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு

15 Aug, 2025 | 10:23 AM
image

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரன் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர மலை கிராமத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிஐஎஸ்எப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உட்பட 46 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மேகவெடிப்பின் காரணமாக தீடீர் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் சோசிட்டி மலை கிராமத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக உள்ளது. இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுவதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரையில் மீட்கப்பட்ட 120 பேரில் 38 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மீட்பு பணிகளில் என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், காவல்துறை, ராணுவம், உள்ளூர் தன்னார்வலர்கள் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை மோசமாக இருப்பதால் என்டிஆர்எப்-ன் இரண்டு புதிய குழுக்கள் உட்பட மீட்பு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மச்சைல் மாதா கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள சோசிட்டி கிராமத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த பேரழிவு நிகழ்ந்தது. ஜூலை 25-ம் தேதி தொடங்கிய வருடாந்திர மச்சைல் மாதா யாத்திரை செப்டம்பர் 5-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதற்காக அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

9,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கான 8.5 கிலோமீட்டர் பாதயாத்திரை சோசிட்டி கிராமத்தில் இருந்தே தொடங்குகிறது. இந்த கிராமம் கிஷ்த்வார் நகரத்திலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட சமூக சமையலறை (லங்கர்) மேகவெடிப்பால் பெரிதும் பாதிப்படைந்தது. திடீர் வெள்ளம் காரணமாக கடைகள் மற்றும் பாதுகாப்பு புறக்காவல் நிலையம் உட்பட பல கட்டமைப்புகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

பேரிடர் ஏற்பட்ட உடன் கிஷ்த்வார் துணை ஆணையர் பங்கஜ் குமார் சர்மா, மூத்த காவல்துறை கண்காணிப்பாளருடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். இந்த மேகவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனேஜ் சின்ஹா இரங்கல் தெரிவித்துள்ளதுடன், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, கிஷ்த்வார் மாவட்டத்தில் தொலைதூர கிராமத்தில் பெரும் மேக வெடிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் மதுபோதையில் இளைஞர்கள் செலுத்திய கார்...

2026-08-10 17:07:08
news-image

புற்றுநோயுடன் போராடும் ஜோ பைடன் ;...

2026-08-10 16:26:11
news-image

ஒரே படகில் 230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக்...

2026-08-10 16:11:05
news-image

தாய்லாந்திலிருந்து இந்தியா சென்ற விமானம் நடுவானில்...

2026-08-10 15:31:27
news-image

குஜராத் மாநிலத்தில் கிணற்றில் ‘தானாகவே அலைபாயும்...

2026-08-10 15:19:57
news-image

சீனாவில் டொல்பின் சூறாவளி : ஷாங்காய்...

2026-08-10 13:29:56
news-image

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதலிடம் :...

2026-08-10 13:14:46
news-image

போரை நிறுத்துவதற்கு ட்ரம்ப் எடுத்த அதிரடித்...

2026-08-10 12:34:46
news-image

தாய்லாந்தில் மீண்டுமொரு துப்பாக்கிச் சூடு: அரசாங்க...

2026-08-10 12:25:39
news-image

பிரேசில் தலைநகரில் ஹெலிகொப்டர் விபத்து: 4...

2026-08-09 12:21:37
news-image

ஈரானின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா காமெனி:...

2026-08-09 11:45:03
news-image

தாய்லாந்து பாடசாலைத் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தோரின்...

2026-08-09 09:36:18