கிழக்கு மாகாணத்தில் இராணுவ தளபதியாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுர ஜெயசேகர செயற்பட்டு இருந்தபோது மனித உரிமை மீறல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு பட்டிருப்பதாக கட்சி ஆய்வின்படி நிரூபிக்கப்படுமாக இருந்தால் அவருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுரஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை தீர்மானத்தை எதிர்கட்சியினர் கொண்டுவர இருக்கின்றனர்.
இது தொடர்பாக தமிழரசு கட்சியை பொறுத்தமட்டில் எவ்வாறு நடந்து கொள்வது பற்றிய கேள்வி எழுந்துள்ளது இது விடயம் தொடர்பாக தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக கூடி கலந்து ஆலோசிக்க வேண்டி உள்ளது.
உண்மையில் அனுர ஜெயசேகர கிழக்கு மாகாணத்தில் இராணுவ தளபதியாக இருக்கும் போது அவர் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார் என்ற விஷயம் ஆராயப்பட வேண்டும்.
அவர் அக்காலத்தில் தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விடையத்தில் செயல்பட்டு இருந்தால் அதற்கு உரிய ஆதாரங்கள் இருக்குமாக இருந்தால் அதை எதிர்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
தேசிய மக்கள் சக்தியானது தங்கள் பக்கம் இருக்கின்றவர்கள் ஊழல் மோசடி இலஞ்சம் இல்லாத சுத்தமானவர்கள் தூய்மையானவர்கள் என கூறி வருகின்றனர். அது உண்மை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கிறது.
எனவே அவர்களுடைய கருத்துக்களையும் எதிர்க்கட்சி கூறுகின்ற கருத்துக்களையும் ஆராய வேண்டியுள்ளது டன். அவர் உண்மையில் தமிழ் மக்களை பாதிக்க கூடிய விதத்தில் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சட்டவிரோதமான செயற்பாட்டில் உடன் பட்டிருந்தால் எமது கட்சி ஆய்வின்படி நிரூபிக்கப்படுமாக இருந்தால் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்போம்.
அதேவேளை அவ்வாறு சம்பந்தப்படவில்லை என்கிற விஷயம் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பாக எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆதரிப்பதா? எதிர்ப்பதா? புறக்கணிப்பதா? என தீர்மானத்தை எடுப்போம்.
அதேவேளை ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் வாதங்களின் கருத்துக்களை பார்க்க வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் இருந்த இராணுவ தளபதிகள் மனித உரிமைகளை மீறியுள்ளனர் புதைகுழி விஷயத்தில் கூட அப்போது இருந்தவர்கள் மனித உரிமைகளை மீறி அப்பாவி மக்களை புதைகுழிக்குள் புதைத்துள்ளனர்.
தேசபந்து தென்னக்கோன் பற்றி பல ஆதாரங்கள் கிடைத்தது எனவே அவரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம் ஏன் என்றால் அவர் கடந்த காலத்தில் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு கட்சியின் ஒரு பொலிஸ் மா அதிபராக இருந்துள்ளார். அதனால் அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவு வழங்கினோம் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM