ரணசிங்க பிரேமதாச தூர நோக்கோடு ஆடைத் தொழிலை உற்பத்தித் தொழிலாக மேம்படுத்தினார். தற்போதைய ஆளும் தரப்பின் கஞ்சா செய்கைக்கு சட்ட ரீதியிலான அனுமதியை வழங்கி அதனை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மொனராகலை மாவட்டத்தைச் சார்ந்த இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தேர்தல் காலத்தில் வலுச்சக்தி அமைச்சு சார் நடவடிக்கைகளில் இவற்றை இவ்வாறு செய்ய முடியும் அவ்வாறு செய்ய முடியும் என சொன்ன விடயங்களை ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை அவ்வாறு செய்ய முடியாது என்று தற்போது தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு வெட்கமோ இல்லாமல் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். எரிபொருள் மீதான 50 ரூபா விசேட பெறுமதி சேர் வரியை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையைக் குறைப்பதாக இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர் கூறியிருந்தனர்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 884 பில்லியன் டொலர்களை தற்போது கடனாக செலுத்த வேண்டியுள்ளது. எனவே டீசல் மற்றும் பெட்ரோலுக்கு 50 ரூபா வரி விதிக்கிறோம் என்று விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அண்மையில் தெரிவித்தார். துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலையில் எரிபொருளை மக்களுக்கு பெற்றுத் தருவோம் என்று தேர்தல் காலங்களில் ஆளும் தரப்பினர் பிரஸ்தாபித்தனர்.
ஆனால் தெளிவான அதிகாரத்தை வைத்துக் கொண்டும் அரசாங்கத்தால் இதுவரையில் எதனையுமே செய்ய முடியாதுபோயுள்ளது. ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, கடுமையாக விமர்சித்தனர். இன்று, இந்த ஆளும் தரப்பினர் 7 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கஞ்சா செய்கையில் ஈடுபட சட்ட ரீதியான அனுமதிகளை வழங்கியுள்ளனர். அன்று ஆடைத் தொழில் உற்பத்தித் தொழிலாக மேம்படுத்தப்பட்டது. இன்று 7 திட்டங்களின் கீழ் 64 ஏக்கர் கஞ்சா செய்கைக்காக சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றது என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM