பளை சோறன்பற்று பகுதியில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம் - வீட்டின் உடமைகள் நாசம்!

15 Aug, 2025 | 01:43 PM
image

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் நேற்று (13) இரவு வீடு ஒன்றின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலம் - சுதாகரன் என்னும் குடும்பஸ்தரின் வீட்டிற்குள் நேற்றிரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் உள்நுழைந்துள்ளனர்.

முகத்தை மூடி மறைத்து கத்தி, வாள்கள், பெற்றோல் குண்டுகள் ஆகியவற்றுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு நபர்கள் வீட்டிற்குள் தாக்குதலை மேற்கொள்வதற்காக அத்துமீறி நுழைந்து உடமைகளை மோசமாக தாக்கி சேதம் விளைவித்ததுடன் தீயிட்டு எரித்துள்ளனர்.

இதில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கதவுகள், கண்ணாடிகள், குளிர்சாதனப்பெட்டி, அலுமாரிகள், ஏனைய பெறுமதியான ஆவணங்களுடன் பெறுமதியான வீட்டு உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.

வீட்டில் இருந்தவர்கள் அபயக் குரல் எழுப்ப தொடங்கியதும் தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் பெற்றோல் போத்தலையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதன் பிரகாரம் பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டியில் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது!

2025-12-07 09:25:55
news-image

மியன்மாரிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கையை வந்தடைந்த...

2025-12-07 09:45:56
news-image

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும்...

2025-12-07 09:22:27
news-image

70 பில்லியன் ரூபா வெள்ள நிவாரண...

2025-12-07 09:57:04
news-image

950 மெட்ரிக் தொன் அவசர உதவி...

2025-12-07 08:31:22
news-image

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3...

2025-12-07 08:14:50
news-image

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்...

2025-12-07 07:58:05
news-image

பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர்...

2025-12-07 07:56:58
news-image

இன்றைய வானிலை

2025-12-07 06:22:23
news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55