(இராஜதுரை ஹஷான்)
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராகவே வாக்களிப்பேன் ஏனெனில் அவர் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்ட காலத்தை அடியொற்றியதாக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுவதை ஏற்க முடியாது என சர்வஜன சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு மாத்திரமல்ல இந்த அரசாங்கத்துக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 11 மாதங்கள் நிறைவடைந்துள்ளது.இருப்பினும் தேசிய தொழிற்றுறையை மேம்படுத்தவும், தொழில் முயற்சியாளர்களை பாதுகாப்பதற்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையை தேர்தல் காலத்தில் விமர்சித்து விட்டு தற்போது அந்த கொள்கைகளையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்படுத்துகிறார்.ஜனாதிபதி பதவி மாத்திரமே மாற்றமடைந்துள்ளதே தவிர பொருளாதார கொள்கை ஒன்றாகவே காணப்படுகிறது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளது.இந்த பிரேரணைக்கு எதிராகவே நான் வாக்களிப்பேன்.ஏனெனில் அருண ஜயசேகர கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டதை அடியொற்றியதாகவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுகிறது.
முன்னாள் இராணுவ உயர் அதிகாரி செயற்பட்ட விதத்தை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்த முடியாது. எதிர்க்கட்சியின் இந்த செயற்பாட்டுக்கு உடந்தையாக என்னால் செயற்பட முடியாது என்பதால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பேன்.
பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையால் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி மேலும் பலமடையும். ஆளுங்கட்சியை பலப்படுத்துவதற்காகவே ஐக்கிய மக்கள் சக்தி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருகிறது.இந்த பிரேரணையால் எதிர்க்கட்சிகளுக்கு எவ்வித பயனும் கிடைக்காது என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM