தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிய அரசாங்கம், பேரூந்து சேவையொன்றை ஆரம்பித்து வைத்து கொண்டாடுவது வெட்கக்கேடு - ஐக்கிய மக்கள் சக்தி கடும் விசனம்

14 Aug, 2025 | 04:35 PM
image

(எம்.மனோசித்ரா)

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிய அரசாங்கம், பேரூந்து சேவையொன்றை ஆரம்பித்து வைத்து அதைக் கொண்டாடுகின்றனர். இது வெட்கக் கேடாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற போது அப்போதைய அரசாங்கம் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தி, பாதாள உலகக் கும்பல்களால் கொல்லப்படும் உயிர்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  வியாழக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 10 மாதங்களாக பொய்களாலேயே தேசிய மக்கள் சக்தி நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் தற்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி.க்கு இடையில் கடுமையான முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

சிச்சியின் செய்மதி விவகாரத்தில் பிரதமரும், அமைச்சர் வசந்த சமரசிங்கவும் முரண்பட்;ட கருத்துக்களைக் கூறியதால் அவை பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இது சமூகத்தில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளதால் முதலீட்டு சபையின் அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அந்த அதிகாரிகள் தவறான தகவலை வழங்கியிருந்தாலும் பிரதமரே சரியான தகவல் எது என்பதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் தற்போது வசந்த சமரசிங்கவே அதனை செய்து கொண்டிருக்கின்றார்.

எனினும் அவருக்கு இன்னும் இது குறித்த தெளிவு இல்லை. இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் மறுபுறம் மனிதப்படுகொலைகளில் ஈடுபட்டு வரும் பாதாள உலகக் கும்பலும் தலைதூக்கியுள்ளது. நாளாந்தம் துப்பாக்கிச்சூடுகளால் உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற போது அப்போதைய அரசாங்கம் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தி, பாதாள உலகக் கும்பல்களால் கொல்லப்படும் உயிர்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.

பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் மாத்திரமின்றி அப்பாவி மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். பொது வெளியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த அழிவு தொடர்பில் அரசாங்கத்தில் எவரும் வாய் திறப்பதில்லை.

கடந்த ஆட்சியாளர்களைப் போன்று நாம் ஊடகங்களில் பிரசாரங்களை நடத்தப் போவதில்லை எனக் கூறிய இவர்கள் தற்போது பேரூந்து சேவையொன்றை மீள ஆரம்பித்து வைப்பதை மேள, தாள வாத்தியங்களுடன் பட்டாசு கொழுத்தி ஒரு பிரம்மாண்ட நிகழ்வாகக் கொண்டாடுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டை துறைமுகத்தை திறந்த வைத்தபோதோ அல்லது அதிவேக நெடுஞ்சாலையை திறந்து வைத்த போதே இந்தளவிற்கு பிரம்மாண்ட நிகழ்வினை நடத்தவில்லை.

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த தவறியவர்கள் பேரூந்து சேவையை ஆரம்பித்து வைத்து விட்டு கொண்டாட்டம் நடத்துகின்றனர். தேசிய பாதுகாப்பு தொடர்பில் எமக்கு வகுப்பெடுப்பதாகக் கூறியவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பத்திருக்கின்றோம்.

தைரியமிருந்தால் அதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஆளுந்தரப்பினருக்கு சவால் விடுக்கின்றோம். சாய்ந்தமருது தாக்குதல்களின் போது கிழக்கு கட்டளை தளபதியாக செயற்பட்டவே தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர்.

அரசாங்கத்தால் அரசாங்கம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும்? ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது இவரே பதில் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுவார்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் விசாரணைகள் பக்கசார்பின்றி முன்னெடுக்கப்படும் என்று எவ்வாறு நம்புவது? பதவி விலகா விட்டால் அவருக்கு வேறொரு அமைச்சினை வழங்குவதற்கேனும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

ஆனால் அவ்வாறு செய்யவில்லை. எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான சகல முயற்சிகளையும் நாம் முன்னெடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் போதை மாத்திரைகளுடன் மருந்தக ஊழியர்...

2026-06-06 13:04:50
news-image

முன்பள்ளிக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பை...

2026-06-06 13:00:59
news-image

சுவிஸில் இருந்து வந்த முதியவர் யாழில்...

2026-06-06 13:07:05
news-image

காலியில் பணம் மற்றும் அதிக போதை...

2026-06-06 12:59:07
news-image

மயிலிட்டியில் மக்களின் காணிகளில் பங்களா அமைத்து...

2026-06-06 12:41:59
news-image

மீகொடை தானசாலை விபத்து: வாகன உரிமையாளர்...

2026-06-06 12:36:25
news-image

வடமாகாணத்தின் மின்விநியோக கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில்...

2026-06-06 13:08:09
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள்...

2026-06-06 12:01:54
news-image

மீகொடை தானசாலை விபத்து: தப்பியோடிய மூவரைக்...

2026-06-06 12:38:33
news-image

சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது :...

2026-06-06 11:28:18
news-image

கடல் வளப் பாதுகாப்புக்கு சர்வதேச அளவில்...

2026-06-06 11:02:10
news-image

யானைக்கால் நோயை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி குறித்து...

2026-06-06 10:32:17