நுவரெலியா - ராகலை தனியார் பஸ் பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Published By: P. Saranya

14 Aug, 2025 | 12:39 PM
image

நுவரெலியா - ராகலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் இன்று வியாழக்கிழமை (14) காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

நுவரெலியா - ராகலை  தனியார் பஸ் சாரதிக்கும் நுவரெலியா - கந்தப்பளை தனியார்  பஸ் சாரதிகளுக்குமிடையே நேற்று புதன்கிழமை (13) மாலை கந்தப்பளை மற்றும் நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திலும் இரு குழுக்களுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நீண்ட காலமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் எனக் கோரியே நுவரெலியா - ராகலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும்  தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் நுவரெலியா - ராகலை வீதியில் இயங்கும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செய்துள்ளனர்.

அதேவேளை திடீரென இன்றைய தினம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் பொதுமக்கள் பலரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியை சந்தித்தனர் இலங்கை சாரணர் இயக்கப்...

2026-09-11 10:18:13
news-image

சட்டவிரோத துப்பாக்கி, எறும்புண்ணி பாகங்களுடன் மூவர்...

2026-09-11 10:15:44
news-image

டிசம்பர் - ஏப்ரல் வரை மழைவீழ்ச்சி...

2026-09-11 10:11:35
news-image

பொதுப் போக்குவரத்தை மக்களின் இலகுவான தேர்வாக...

2026-09-11 10:12:07
news-image

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி பருத்தித்துறையில்...

2026-09-11 10:11:03
news-image

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்...

2026-09-11 09:48:26
news-image

'ஷிரான் பாசிக்கின் சகாவுக்குச் சொந்தமான 10...

2026-09-11 09:51:57
news-image

யோஷிதவுக்கு எதிரான வழக்கு : பொய்...

2026-09-11 09:33:27
news-image

புலத்சிங்கள பகுதியில் புதையல் தோண்டிய மூவர்...

2026-09-11 09:43:21
news-image

மஹியங்கனையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2026-09-11 09:43:29
news-image

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட ரூ.1,104 மில்லியன் பெறுமதியான...

2026-09-11 09:33:58
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: விசாரணைக்கு 03...

2026-09-11 08:56:14