கஞ்சா பயிர்ச்செய்கையை அனுமதிப்பது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துமா? 

13 Aug, 2025 | 06:21 PM
image

முதலீட்டு வாரியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ஒரு திட்டமாக கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி 7 வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கடந்த 12.08.2025 அன்று தெரிவித்தார். 

இதன் நோக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் பயிர்ச்செய்கையின் அனைத்து பகுதிகளையும் ஏற்றுமதிக்கு மட்டுமே பயன்படுத்துவதும், நாட்டிற்கு பொருளாதார நன்மைகளைப் பெறுவதும் என்பதை அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில், இந்த முடிவை இலங்கையில் செயற்படுத்த எத்தணித்திருந்தனர். எனினும், இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை மனநல மருத்துவர்கள் சங்கம், சமூக மருத்துவர்கள் சங்கம் மற்றும் ADIC நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகங்களின் செல்வாக்கு காரணமாக முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. 

முந்தைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும். இந்த திட்டத்தை ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கம் இத்திட்டத்தை அமுல்படுத்த முயன்றபோது தற்போதைய தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர், அதனை கேலி செய்து எதிர்ப்பினை தெரிவித்திருந்தமை அவரது சமூக ஊடக கணக்குகளில் காணப்பட்டது. அதுபோன்ற சிறந்த நிலையில் இருந்த ஒருவர், தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சரான பின்னர், இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதானது வருந்தத்தக்கது. 

கஞ்சாவை சட்டப்பூர்வ பொருளாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் காணப்பட்டாலும், உலகளாவிய ரீதியில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான முயற்சியானது, பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் அறிஞர்களின் எதிர்ப்பால் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த சூழ்நிலையை மாற்றுவதற்கான ஒரு நுணுக்கமாக, கஞ்சா தொழிலை 'ஜார்ஜ் சோரோஸ்' போன்ற தொழிலதிபர்களுடன் இணைந்து ஒரு பொருளாதாரப் பொருளாக, ஏற்றுமதி வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு பொருளாக, புதிய வடிவத்தில் முன்வைப்பதன் மூலம் கஞ்சாவை சட்டரீதியாக்குவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

எனவே, இது கஞ்சா வியாபாரத்தின் இறுதி இலக்கை அடையப் பயன்படுத்தப்படும் ஒரு மூலோபாயத் திட்டமாகும். புதிய அரசாங்கம் அந்த திட்டத்தின் ஒரு தரப்பாக மாறியுள்ளமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். 

சர்வதேச சந்தையில் கஞ்சா அதிகமாக காணப்படுகிறது. எனினும் சர்வதேச ரீதியாக தேவை அதிகரிக்கவில்லை. சந்தையின் இடைவெளி நிரப்பப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச ரீதியாக கஞ்சா சந்தை தற்போது வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியாது. 

பொருளாதார நன்மைகள் என்று கூறும் தவறான அறிக்கைகளின் அடிப்படையில் இதுபோன்ற முடிவுகளை எடுப்பதன் மூலம் எமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மேலும் அதிகரித்து பல பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் கூற வேண்டும். 

தற்போதைய அரசாங்கம் அத்தகைய முடிவை எட்டியுள்ளமை ஆச்சரியமாகவும் சந்தேகமாகவும் உள்ளது. குறிப்பாக, முந்தைய அரசாங்கங்கள் எடுத்த பல நடவடிக்கைகளை விமர்சித்து தடுத்து நிறுத்தும் தற்போதைய அரசாங்கம், முந்தைய அரசாங்கங்கள் கொண்டுவந்த திட்டத்தை இவ்வளவு விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் வலுவான சந்தேகங்களை எழுப்புகிறது.  

இந்த முடிவை செயல்படுத்தும் அதிகாரிகள் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.

01. இலங்கையில் தற்போதும் தடைசெய்யப்பட்டுள்ள பல்வேறு போதைப்பொருட்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளது. இத்தகைய சூழலில், பாதுகாப்பான பயிர்ச்செய்கை எனும் பெயரில் ஆரம்பிக்க முயற்சிக்கும் கஞ்சா பயிர்ச்செய்கையானது பாதுகாப்பான வலயத்தை மீறாது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை அளிக்க முடியும்?  

02. உலக சந்தையில் கஞ்சா பயிர்ச்செய்கை மூலம் நாடும் அரசாங்கமும் ஈட்டிய சந்தைப்படுத்தலின் அளவு, விலைகள், இலாபம் மற்றும் உண்மையான அந்நிய செலாவணியை மதிப்பிடுவதற்கு ஒரு சுயாதீனமான மற்றும் நம்பகமான சர்வதேச சந்தை ஆய்வுகள் ஏதேனும் நடாத்தப்பட்டுள்ளதா?  

03. சீனா மற்றும் நெதர்லாந்து போன்ற தற்போதைய 'சட்டப்பூர்வ' கஞ்சா பயிர்செய்கையாளர்களுடன் சர்வதேச சந்தையில் போட்டியிடுவதற்கு போதுமான திறன் நம்மிடம் உள்ளனவா அவை ஆராய்ந்து பார்க்கப்பட்டுள்ளதா?  

04. இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிலிருந்து 'சட்டப்பூர்வ' ஏற்றுமதியுடன் எளிதாக போட்டியிடுவதற்கு, ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டொன் கஞ்சாவை உற்பத்தி செய்யும் தற்போதைய சர்வதேச சட்டவிரோத கஞ்சா சந்தையை நீஙக்ள் கருத்தில் கொண்டீர்களா?   

05. எந்தவொரு பன்னாட்டு கஞ்சா நிறுவனமும் இலங்கையில் தனியாகவோ அல்லது உள்ளாட்டு பங்குதாரர்கள், அல்லது அரசாங்கத்துடனோ கஞ்சாவை பயிரிடுவதற்கான அனுமதி வழங்கப்படுமா?   

06. அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய மிகவும் பொருத்தமான பணப்பயிர்கள் (உதாரணம். ஆமணக்கு, போஞ்சி - மருத்துவ ஆமணக்கு, சிட்ரஸ் போன்றவை) தொடர்பாக பரிசீலிக்கப்பட்டுள்ளதா?  

07. கஞ்சா பயிர்ச்செய்கையால் ஏற்படுகின்ற அந்நிய செலாவணி நெருக்கடிகளை எந்த நாடுகள் வெற்றிகரமாகச் சமாளித்துள்ளன?  

08. கஞ்சா நிறுவனங்களில் புகையிலைத் தொழில்துறை மேற்கொண்டுள்ள பாரிய முதலீடுகள் தொடர்பாக குழு கருத்தில் கொண்டதா?  

கஞ்சா பயிர்ச்செய்கை சட்டரீதியாக்கப்படின், இந்த முடிவு எதிர்காலத்தில் நமது நாட்டின் சுகாதாரம், சமூகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நாட்டை பின்னோக்கி கொண்டுசெல்லும் ஒரு திட்டமாகும் என்பதை இறுதியாக நாம் வலியுறுத்துகின்றோம். 

மக்களின் நட்பு அரசாங்கமாக, இந்த முடிவை உடனடியாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட வேண்டும் என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வலியுறுத்துகிறது.   

- மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச சவால்களை முறியடித்த இலங்கை சுற்றுலாத்துறை...

2026-07-14 18:22:05
news-image

ஆசியாவின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல்...

2026-07-14 14:49:21
news-image

பாகிஸ்தானின் முடிவில்லா உள்நாட்டுப் போர் : ...

2026-07-14 14:10:51
news-image

கார்மேகங்கள் சூழும் மாகாண சபை தேர்தல்கள்...

2026-07-14 11:13:28
news-image

‘எல்நினோ’ காலநிலை மாற்றங்களால் பொருளாதார விளைவுகளை...

2026-07-14 05:44:12
news-image

  3 சதவீத பொருளாதார வளர்ச்சியெனும் எதிர்வு ...

2026-07-14 05:18:56
news-image

தேசிய ஆவணக்காப்பகத்திலுள்ள மலையக ஆவணங்களின் எதிர்காலம்

2026-07-13 10:54:03
news-image

இரத்தம் தோய்ந்த சிறை வன்­மு­றைகள்

2026-07-12 16:08:33
news-image

புதிய ஆயரும் சர்ச்­சையும்

2026-07-12 15:17:06
news-image

வேர்­களைத் தேடிய பயணம்

2026-07-12 14:47:22
news-image

துருக்கிய - இந்திய முரண்

2026-07-12 13:47:18
news-image

500,000 ரூபாவை மீறும் ரொக்கப் பரிவர்த்தனைகள்...

2026-07-12 13:45:21