அமைச்சுக்களின் பணியாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வு

Published By: Digital Desk 3

13 Aug, 2025 | 05:44 PM
image

அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும்  செயற்திறனான சேவையாக மாற்றுவதற்காக, சகல அமைச்சுக்களிலும் பணியாற்றும்  பணியாளர்களுக்காக   செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த விசேட செயலமர்வுத் தொடர் ஆகஸ்ட் 15, 16 மற்றும் 23 ஆகிய திகதிகளில் அலரி மாளிகையில் நடைபெற உள்ளது. 

‘AI for Transforming Public Service’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த செயலமர்வுத் தொடர், அரசாங்கத்தின் முதன்மையான திட்டமான அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கான ஆரம்ப அணுகுமுறையாக அதிகாரிகளை தயார்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அரச சேவையில் சாதகமான அணுகலை ஏற்படுத்தும் நோக்குடன் நடைபெறுகிறது. 

இதன் முதல் திட்டம் அண்மையில்  ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளுக்காகவும், இரண்டாவது  திட்டம்  கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்காகவும், மூன்றாவது திட்டம் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்காகவும் நடைபெற்றது.

ஏனைய அனைத்து அமைச்சுக்களின்  அதிகாரிகளுக்காகவும் எஞ்சிய செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின்  சிரேஸ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA)  நிறைவேற்றுப் பணிப்பாளர்  சஞ்சய கருணாசேன, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA)  பணிப்பாளர் சபை  உறுப்பினர்களான ஹர்ஷ புரசிங்க மற்றும்  சம்சா அபேசிங்க ஆகியோர் வளவாளர்களாக  இணைவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

''முழு நாடுமே ஒன்றாக'' என்னும் நடவடிக்கைகமைய...

2026-07-21 16:16:18
news-image

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால் பல இலட்சம்...

2026-07-21 16:12:20
news-image

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

2026-07-21 16:13:51
news-image

ஹவாய் 'ரிம்பேக்' சர்வதேச கடற்படைப் பயிற்சியில்...

2026-07-21 15:53:28
news-image

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல்...

2026-07-21 15:47:00
news-image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும்...

2026-07-21 15:27:16
news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 16:25:42
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22