பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசாங்கத்துக்கு விடுக்கும் எச்சரிக்கை - நாமல் ராஜபக்ஷ

13 Aug, 2025 | 05:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை பிரேரணை அரசாங்கத்துக்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கையாகும் என்பதால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (13)  நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் விவகாரம் முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. குண்டுத்தாக்குதலை பிரதான அரசியல் பிரச்சாரமாக்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ , கோட்டபய ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை பிரேரணை அரசாங்கத்துக்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கையாகும் என்பதால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம்.

குண்டுத்தாக்குதலின் பிரதான தற்கொலைதாரிகளின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்.அவருக்கு எதிராக கட்சி மட்டத்தில் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.குண்டுத்தாக்குதலின் உண்மை வெளிவர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிர பரவல்:...

2026-08-10 10:10:23
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-08-10 10:01:27
news-image

ஹெட்டிபொலவில் அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை...

2026-08-10 09:53:53
news-image

தெஹிவளையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை...

2026-08-10 09:58:47
news-image

திவுலபெலஸ்ஸவில் 88 இலட்சம் ரூபா பெறுமதியான...

2026-08-10 09:42:37
news-image

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன்...

2026-08-10 09:10:24
news-image

தமன பகுதியில் புதையல் தோண்டிய நபர்...

2026-08-10 09:04:44
news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59