மட்டக்களப்பில் 700 சிறுவர்கள் ; மேல் மாகாணத்தில் 2019 சிறுவர்கள் ; நாட்டில் 4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில்! - அமைச்சர் ஆனந்த விஜேயபால 

13 Aug, 2025 | 05:07 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 சிறுவர்கள் மற்றும் மேல் மாகாணத்தில் 2019 சிறார்கள் உட்பட நாட்டில் 4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பொலிஸார் கண்டறிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று புதன்கிழமை (13) பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்திக் குழு தலைவர் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இல்லாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 

குறித்த சிறுவர்களின் தாய் அல்லது தந்தை வெளிநாடு சென்றிருப்பது அல்லது சிறுவர்களை விட்டுவிட்டு தாய் அல்லது தந்தை வேறு திருமணம் முடிப்பது அல்லது போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது போன்ற காரணங்களினால் தாய், தந்தை இல்லாது மட்டக்களப்பில் 700 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

அதேவேளை மேல் மாகாணத்தில் 2019 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதுடன் இலங்கை முழுவதும் 4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். எனவே இந்த குழந்தைகளுக்கு அன்பு, பராமரிப்பு, ஆதரவை வழங்குவதற்கும் அவர்களின் கல்வியை பல்வேறு வழியில் தொடர்வதை உறுதி செய்வதற்கு திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.

அத்துடன் மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் மாவட்டத்தில் 600 பொலிஸார் கடமையாற்ற வேண்டிய நிலையில் 300 பொலிஸார் மாத்திரமே தற்போது உள்ளனர். எனவே, இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய 50 பொலிஸார் மாவட்டத்துக்கு வழங்கப்படும்.

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனைகளை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையுடன் பொலிஸார் இணைந்து ஒவ்வொரு பொலிஸ் நிலைய பிரிவுகளில் சோதனை நடவடிக்கை எடுத்து, சட்டவிரோத மதுபானத்தை  இல்லாது ஒழிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக  பிரதேச சபை  தலைவர்கள் நீண்ட கலந்துரையாடலை நடத்தி கவலைகளை முன்வைத்தனர். இதற்கமைய புவியியல் சுரங்கப் பணியகம்  ஒவ்வொரு நபருக்கும் வழங்கும் உரிமம் தொடர்பாக எந்த நேரத்திலும் பொலிஸார் பிரதேச செயலாளர், பிரதேச சபையினர் கேட்டால் தெரிவிக்கவேண்டும்.

அவ்வாறே  இன்று வரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள  மண் அகழ்வு அனுமதிப்பத்திரம்  தொடர்பாக உடனடியாக அரசாங்க அதிபருக்கும் மற்றும் அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் வழங்கப்படவேண்டும். அதேவேளை இந்த சட்டவிரோத மணல் அகழ்வோர் வாகனங்களை நிறுத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளீதரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத், இரா. சாணக்கியன். ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி வர்ண ஜயசுந்தர, மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மென்டிஸ், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன, 15 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மட்டக்களப்பு அம்பாறை விசேட அதிரடிப்படை தளபதி, மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27
news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20