எதிர்பார்ப்பின் உச்சத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'கூலி'

13 Aug, 2025 | 04:45 PM
image

உலகம் முழுவதும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் பெரும் பதற்றத்தில் இருக்கிறார்கள். அவரின் நடிப்பில் வெளியாகும் 'கூலி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.

 வட அமெரிக்க நாடுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வெளியீட்டிற்கு முன்னரே வசூல் சாதனை உடன் 'கூலி' திரைப்படத்தை ரசிகர்கள் வரவேற்க தயாராக இருக்கிறார்கள்.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருப்பதால் மட்டுமில்லாமல் தொடர் வெற்றிகளை வழங்கி தமிழ் திரையுலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - 'கூலி' திரைப்படத்தை இயக்கியிருப்பதால் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடத்தில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

படத்தைப் பற்றிய எந்தவித எதிர்மறையான விமர்சனங்களும் சமூக வலைதள பக்கத்தில் எழுந்து விடக்கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தி வரும் படக்குழுவினர் படத்தை பற்றிய நேர் நிலையான விடயங்களை பகிர்ந்து கொள்வதை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் இருக்கும் நிறை - குறைகளை ரசிகர்கள் நாளை படமாளிகையில் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று அமைதி காக்கிறார்கள்.

படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் வெற்றி பெறுவதற்காக திருவண்ணாமலை - ராமேஸ்வரம்- திருப்பதி-  என புனித தலங்களுக்கு பயணம் மேற்கொண்டு இறையருளை வேண்டுகிறார்.

'கூலி 'திரைப்படம் வெளியாவதற்கு முன்பே முதல் நாளில் மட்டும் நூறு கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்திருப்பதால் புதிய வசூல் சாதனையையும் படைத்திருக்கிறது. 

தமிழகம் - கேரளா - ஆந்திர பிரதேசம் - தெலுங்கானா - கர்நாடகா - ஆகிய தென்னிந்திய பிராந்தியங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படமாளிகைகளிலும், வட இந்தியா, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட படமாளிகைகளிலும், இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளிலும் திரையிடப்படும் 'கூலி' முதல் நாளில் இந்திய திரைப்பட வர்த்தகர்களின் அவதானத்தின் படி 300 கோடி ரூபாய் வசூலித்து இந்திய சினிமாவில் புதிய வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right