நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதில் கவனம் செலுத்தாமல் உண்மையை வெளிப்படுத்த முயற்சியுங்கள் - எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

13 Aug, 2025 | 04:44 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற போது தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக பணியாற்றினார். அதனை அடிப்படையாகக் கொண்டே அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டது. எனவே அரசாங்கம் இதனை தோற்கடிப்பதற்காக செயற்படாமல் உண்மையை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற போது தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக பணியாற்றினார். கிழக்கிலுள்ள பல நபர்கள் தொடர்பில் இந்த தாக்குதல்கள் குறித்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனவே தற்போது பிரதான சூத்திரதாரியை இனங்காண்பதற்கான விசாரணைகளுக்கு தடையான காரணிகளை நீக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அந்த அடிப்படையிலேயே பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தோம். எனினும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தமையால் அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் விரைவில் நடத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் யார் என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கத்தோலிக்க சபைக்கு இது குறித்து வாக்குறுதியளித்திருக்கின்றார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது அவரது பொறுப்பாகும். எனவே நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை விடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை பக்க சார்பின்றியும், வெளிப்படை தன்மையுடனும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

இதன் போது அருண ஜயசேகரவை தவிர்த்து விசாரணைகளை முன்னெடுத்து, அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா இல்லையா என்பதையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அரசாங்கத்தின் மீது சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டிருக்கின்றார். யார் மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது எமது நோக்கமல்ல. உண்மையான சூத்திரதாரி யார் என்பது இனங்காணப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

கடந்த அரசாங்கத்தின் போது அப்போதைய சுகாதார அமைச்சர் கெஹெலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் அதனை நிறைவேற்ற இடமளிக்கப்பட மாட்டாது என அப்போதைய ஆளுங்கட்சி கூறியது. ஆனால் இறுதியில் கெஹெலியவுக்கு என்ன நடந்தது? எனவே ஆளுங்கட்சியானாலும் எதிர்க்கட்சியானாலும் எம்.பி.யொருவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மையை வெளிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள்...

2026-07-13 12:22:38
news-image

காலி முகத்திடலில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன...

2026-07-13 12:22:28
news-image

இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் நாட்டில்...

2026-07-13 11:48:46
news-image

இலங்கை - உஸ்பெகிஸ்தான் இடையே புதிய...

2026-07-13 11:36:24
news-image

யக்கல பகுதியில் 5,000 லீற்றருக்கும் அதிக...

2026-07-13 12:22:14
news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26
news-image

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ...

2026-07-13 09:56:19
news-image

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில்...

2026-07-13 09:25:14