பொதுவாகவே கும்ப ராசி- கன்னி ராசி- தனுசு ராசி - மீன ராசி - ஆகிய உபய லக்னக்காரர்கள் இரட்டை சிந்தனையுடனே இருப்பார்கள். இவர்கள் எப்போதும் ஒற்றை சிந்தனையுடன் இயங்குவதில்லை.
இரட்டை மனதுடன் இருப்பதால் பல தருணங்களில் இவர்கள் மனக் குழப்பங்களுக்கு ஆளாகுவதுண்டு. அதிலும் மாதந்தோறும் இடம்பெறும் சந்திராஷ்டம தினங்களில் இவர்களுடைய மனம் நிலை கொள்ளாமல் அலைபாயும்.
இவர்கள் மட்டுமல்லாமல் ஏனைய ராசிக்காரர்களும் மனக்குழப்பத்திற்கு ஆளாகுவார்கள். அதிலும் சிக்கலான தருணத்தில் மனக்குழப்பத்திற்கு ஆளாகி தவிப்பார்கள்.
மேலும் சிலர் எதிர்மறை சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பார்கள். இதுபோன்ற தரும் தருணங்களில் மனக் குழப்பத்திலிருந்து விடுதலை பெற பிரத்யேக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : வெற்றிலை, பச்சை வண்ண நூல்.
பதினோரு என்ற எண்ணிக்கையிலான வெற்றிலையை வாங்கி அதனை பச்சை வண்ணத்திலான நூலால் கோர்த்து அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று அங்கு தனிச்சன்னதியுடன் வீற்றிருக்கும் ஆஞ்சநேயருக்கு திங்கட்கிழமை காலை 6:00 மணி முதல் 7 மணிக்குள்ளாக வெற்றிலையை சாற்றி வணங்க வேண்டும்.
இதுபோல் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் திங்கட்கிழமைகளில் 11 வெற்றிலையை மாலையாக்கி சாற்றி வணங்க வேண்டும். அதன் பிறகு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனையை ஏற்பட்டு, நீங்கள் முடிவெடுத்து அதன்படி நடந்து வெற்றியை பெறுவீர்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM