யாழ்ப்பாணத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாளை செவ்வாய்க் கிழமை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்துமாறு வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இக்­குழு விடுத்­துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்­கையின் நீதி­பதி ஒரு­வ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்கும் இந்த அசா­தா­ரண நிலை­மை­ என்­பது தற்­கா­லத்தை அள­விடக் கூடி­ய­ ஒ­ரு­எ­டு­கோ­ளா­க­வே­ வி­ளங்­கு­கின்­றது. 

இச் சம்­ப­வ­மா­ன­து ­நீ­தித்­து­றைக்கு மட்­டு ­மன்­றி­ நீ­தியை நிலை­நாட்ட விழையும் மனி­தஉ­ரி­மை ­செ­யற்­பாட்­டா­ளர்கள், மனி­த ­உ­ரிமை ஆர்­வ­லர்கள், சிவில் அமைப்­புக்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் போன்­றோ­ருக்கும் விடுக்­கப்­பட்ட ஒரு­ அச்­சு­றுத்­த­லா­க­வே ­பார்க்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. 

மேல் நீதி­மன்­ற­நீ­தி­ப­தி சட்டம் ஒழுங்­கை­நி­லை ­நி­றுத்­தி­ நீ­தியை நிலை ­நாட்­ட ­எ­டுத்­து­வ­ரும் ­அண்­மைக்­கா­ல ­மு­யற்­சிகள் பாதிக்­கப்­பட்­ட ­ச­மூ­கத்தின் மத்­தியில் ஓர் நம்­பிக்­கை­யை­ ஏற்­ப­டுத்தியிருந்­தது. இன்­று அவர் கண்­க­லங்கி நிற்­ப­தா­னது ஒட்­டு­மொத்­த­ நீ­தித்­து­றையின் மீது­வி­ழுந்­த­ பே­ரி­டி­ என்றே கரு­து­கின்றோம். இத் தாக்­குதல் சம்­ப­வ­மா­னது நன்­கு­ திட்­ட­மி­டப்­பட்­டு­ ந­டத்­தப்­பட்­டி­ருக்­கலாம் என்­ற­ சந்­தே­கத்­தி­னை­யே­ காட்­டி­ நிற்­கின்­றது. 

இதன்மூலம் இலங்­கையில் நீதி­யை­ நி­லை ­நி­றுத்­தவும் மனி­த­உ­ரி­மை­க­ளை­ மேம்­ப­டுத்­தவும் செயற்­ப­டும் ­செ­யற்­பாட்­டா­ளர்­க­ளின் ­பா­து­காப்­பு­ கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.  இத்­தாக்­குதல் குறித்து  இலங்­கை ­அ­ர­சா­ன­து பல் கோணங்­களில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­ த­குந்­த­ ந­ட­வ­டிக்­கை ­எ­டுக்­க­ வேண்டும். இவ் அநீ­திக்­கெ­தி­ரா­க ­வீ­தியில்  இறங்­கி ­மக்கள் குரல் கொடுக்­க ­வேண்டும் என்று ­வேண்டிக் கொள்ளும்  அதே­வேளை, மேற்­ப­டி­ தாக்­குதல் சம்­ப­வத்­தினைக் கண்­டித்­து நாளை செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணிக்­கு­ வ­டக்­கு, ­கி­ழ க்­கு­ மா­கா­ணங்­க­ளி­லுள்­ள­ அ­னைத்­து­ மா­வட்­டங்­க­ளிலும் மாபெரும் கண்­டனப் பேர­ணி­யி­னை­ மேற்­கொள்­ளுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

அண்­மைக்­கா­ல­மா­க­ வ­டக்­கு,­ கி­ழக்­கு­ மா­கா­ணங்­களில்  இடம்­ பெற்­று­வரும் தொடர் அச்­சு­றுத்­தல்கள், மனி­த­உ­ரி­மை­மீறல்  சம்­ப­வங்கள் குறித்­து ­சர்­வ­தே­ச­ ச­மூ­கத் ­தின்­ க­வ­னத்­திற்­கு­ கொண்­டு­ செல்லும் முக ­மா­க­ இக்­கண்­டனப் பேர­ணியில் மக்கள், மனி­த­உ­ரி­மை ­செ­யற்­பாட்­டா­ளர்கள், ஆர்­வ­லர்கள், சிவில் அமைப்­புக்களின் பிரதிநிதிகள், தொழிற்­சங்­கத்தினர், பல்­க­லைக்­க­ழ­க­ மா­ண­வர்கள், மத­கு­ரு­மார்கள், நலன்­ வி­ரும்­பிகள் என அனைவரும் கலந்துகொண்டு எமது எதிர்ப்பினை ஒன்றிணைந்து வெளிப்படுத் துவோம்.

பேரணி தொடங்கும் இடங்கள்:-

1. அம்பாறை :- கல்முனை மனித  உரிமை ஆணையகத்திற்கு அருகாமையில்.

2. மட்டக்களப்பு:- காந்திபூங்கா

3. திருகோணமலை:- கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு அருகாமையில்

4. மன்னார்:- கச்சேரிக்கு அருகாமையில்

5. வவுனியா:- கச்சேரிக்கு அருகாமையில் 

6. கிளிநொச்சி:- டிப்போசந்தி, கிளிநொச்சி.

7.முல்லைத்தீவு:-கச்சேரிக்கு அருகாமை யில்

8.யாழ்ப்பாணம்-: கச்சேரிக்கு அருகாமை யில் என்று அவ் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.