SLC T20 லீக் இறுதிப் போட்டியில் டீம் க்றீன்ஸ் ; இன்று நடைபெறும் தீர்மானம் மிக்க போட்டியில் க்றேஸ் - ப்ளூஸ்

13 Aug, 2025 | 02:29 PM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வரும் எஸ்எல்சி ரி20 லீக் (SLC T20 League) உள்ளூர் மும்முனை கிரிக்கெட் தொடரில் தனது முதல் 3 போட்டிகளில் வெற்றியீட்டிய டீம் க்றீன்ஸ் முதலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

இதேவேளை, இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள அணியை எஸ்எஸ்சி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள டீம் க்றேஸ் - டீம் ப்ளூஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெரும்பாலும் தீர்மானிக்கவுள்ளது.

இந்த மும்முனை கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்றில் டீம் ப்ளூஸ் அணியை 4 விக்கெட்களாலும், டீம் க்றேஸ் அணியை 5 விக்கெட்களாலும் இரண்டாம் சுற்றில் டீம் ப்ளூஸ் அணியை 72 ஓட்டங்களாலும் டீம் க்றீன்ஸ் வெற்றிகொண்டது.

டீம் க்றேஸ் அணி முதல் சுற்றில் டீம் ப்ளூஸ் அணியை 24 ஓட்டங்களால் வெற்றிகொண்டிருந்தது.

இந்த போட்டி முடிவுகளின் பிரகாரம் டீம் க்றீன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதுடன் அவ்வணிக்கு டிம் க்றேஸ் அணியுடனான இரண்டாம் சுற்று போட்டி எஞ்சியுள்ளது. அப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

நான்கு வீரர்களே ஓரளவு பிரகாசிப்பு

ஸிம்பாப்வேக்கு எதிரான ரி20 தொடர், ரி20 ஆசிய கிண்ணம் ஆகியவற்றுக்கு அதிசிறந்த விரர்களைத் தேர்வுசெய்யும் நோக்கத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் எஸ்எல்சி ரி20 லீக் தொடரை ஏற்பாடு செய்து நடத்திவருகிறது.

ஆனால், குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு எந்தவொரு வீரரும் மிகச் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தவில்லை.

சாமிக்க கருணாரட்ன சகலதுறைகளிலும் நுவனிது பெர்னாண்டோ துடுப்பாட்டத்திலும் அக்கல தனஞ்சய, நுவன் துஷார ஆகியோர் பந்துவீச்சிலும் ஓரளவு பிரகாசித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை வரை நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளில் நுவனிது பெர்னாண்டோ (70), சரித் அசலன்க (59), காமில் மிஷார (52), நிரோஷன் திக்வெல்ல (52), கமிந்து மெண்டிஸ் (50) ஆகிய ஐவரே தலா ஒரு அரைச் சதம் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் அக்கில தனஞ்சய, நுவன் துஷார ஆகிய இருவரும் தலா 5 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர். துஷான் ஹேமன்த, ஏஷான் மாலிங்க ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளதுடன் அவர்கள் இருவரே ஒரு போட்டியில் 4 விக்கெட் குவியல்களைப் பதிவு செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம்...

2026-08-11 20:03:54