(நெவில் அன்தனி)
பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் 202 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய மேற்கிந்தியத் தீவுகள் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.
இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றில் 34 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றுள்ளது.
அணித் தலைவர் ஷாய் ஹோப் குவித்த ஆட்டம் இழக்காத சதமும் ஜேடன் சீல்ஸின் 6 விக்கெட் குவியலும் மேற்கிந்தியத் தீவுகளின் தொடர் வெற்றியில் பிரதான பங்காற்றின.

ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 294 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 42ஆவது ஓவர் வரை ஓட்டங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டதுடன் 42ஆவது ஓவரில் அதன் மொத்த எண்ணிக்கை 6 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களாக இருந்தது.
ஆனால், அதன் பின்னர் ஷாய் ஹோப், ஜஸ்டின் க்றீவ்ஸ் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 50 பந்துகளில் 110 ஓட்டங்களைப் பகிரந்து மேற்கிந்தியத் திவுகளின் மொத்த எண்ணிகையை 294 ஓட்டங்களாக உயர்த்தினர்.
ஆறாவது விக்கெட் வீழ்ந்தபோது 68 பந்துகளில் 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த ஷாய் ஹோப, அடுத்த 26 பந்துகளில் மேலும் 60 ஓட்டங்களைக் குவித்து 94 பந்துகளில் 10 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 120 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
ஜஸ்டின் க்றீவ்ஸ் 24 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்த இருவரைவிட எவின் லூயிஸ் 37 ஓட்டங்களையும் ரொஸ்டன் சேஸ் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீம் ஷா 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ஜேடன் சீல்ஸின் வேகபந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 29.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 92 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் சல்மான் அகா (30), மொஹம்மத் நவாஸ் (23), ஹசன் நவாஸ் (13) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைளைத் தொட்டனர்.
சய்ம் அயூப், அப்துல்லா ஷபிக், அணித் தலைவர் மொஹம்மத் ரிஸ்வான், ஹசன் அலி, அப்ரார் அஹ்மத் ஆகிய ஐவர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.
பந்துவீச்சில் ஜேடன் சீல்ஸ் 7.2 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் குடாகேஷ் மோட்டி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஷாய் ஹோப்; தொடர்நாயகன்: ஜேடன் சீல்ஸ்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM