லிப்டன் சுற்று வட்டப்பகுதியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்திய 13 பல்லைக்கழக மாணவர்களையும் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் பல்கழலக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறை என்பவற்றிக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த சத்தியாகிரக போராட்டம் நேற்று மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், இன்று மாலை சத்தியாகிரகப் Nபுhராட்டத்தில் ஈடுபட்டோர் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய மாணவியுட்பட 13 மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 13 மாணவர்களையும் பொலிஸார் மாலை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த மாணவர்களை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.