செயற்கை நுண்ணறிவில் புரட்சியை ஏற்படுத்த நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் - டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

Published By: Priyatharshan

13 Aug, 2025 | 10:06 AM
image

( வீ. பிரியதர்சன்)

செயற்கை நுண்ணறிவு ( AI ) வியடயத்தில் அரசாங்கம் ஏற்கனவே முன்னோக்கிச் செல்கின்றது. ஒவ்வொரு இலங்கையருக்கும் செயற்கை நுண்ணறிவு என்ற எமது இலக்கு சரியாக உள்ளது. டிஜிட்டல் மாற்றத்தில் எவரும் பின்னிற்க முடியாது. அதனை செயற்படுத்துவதற்கான நேரம் தற்போது சரியாகிவிட்டது.செயற்கை நுண்ணறிவில் ( AI ) புரட்சியை ஏற்படுத்த நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். இலங்கை அதனை ஏற்படுத்துவதற்கு தயார். இலங்கையர்களுக்கு அதற்கான தகுதி, படைப்பாற்றல், பிரித்தாளும் திறன் உள்ளது என்பதை நாம் நம்புகின்றேன் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து ஸ்ரீலங்கா மொபிட்டெல், இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாடு -2025 ( National AI Expo & Conference -2025 ) எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ள நிலையில் இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கும் மாநாடு இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டை டிஜிட்டல் மயப்படுத்திவரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) என்பது மிகவும் அவசியமானது. செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் நடக்கும் ஒன்றல்ல. அது தற்போது நடைமுறையில் உள்ளது. எமது கையடக்கத் தொலைபேசிகளில், இணைத்தளங்களில் மட்டுமல்லாது எமது அன்றாட வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக மாறியுள்ளது. உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழிற்துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் பொருளாதாரங்களையும் வலுப்படுத்தி வருகின்றது. 

ஆனால் இது உண்மையான விடயமாக இருந்த போதிலும் இலங்கையானது செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டில் பின்னடைவில் காணப்படுகின்றது. இந்தியாவில் 57 % வீதமான அரச சேவைகளும் சிங்கப்பூரில் 90 வீதமான அரச சேவைகளும் செயற்கை நுண்ணறிவை (AI) ஈடுபடுத்துகின்றன. வியட்நாமும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்ற நிலையில், இலங்கையர்களான நாம் பார்த்துக் கொண்டிருக்காது செயற்கை நுண்ணறிவை (AI) எமது சேவைகளில் ஈடுபடுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாடு -2025 ( National AI Expo & Conference -2025 ) என்பது எமது நாட்டுக்கு ஒரு ஒரு திருப்புமுனையாக அமையவுள்ளது. இதில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) வல்லுநர்கள், தொழிற்றுறையினர், கல்விமான்கள், கண்டுபிடிப்பாளர்கள், கலந்துகொள்கின்றனர். ஒவ்வொரு இலங்கையருக்கும் செயற்கை நுண்ணறிவு ( AI ), அதனடிப்படையில் எமது இலக்கு சரியாக உள்ளது. மொனராகலையில் உள்ள விவசாயி முதல் கொழும்பிலுள்ள தொழில் முயற்சியாளர் வரை செயற்கை நுண்ணறிவு ( AI ) பயன்படுத்தப்படும்.

செயற்கை நுண்ணறிவு ( AI ) வியடயத்தில் அரசாங்கம் ஏற்கனவே முன்னோக்கிச் செல்கின்றது. நாம் தேசிய செயற்கை நுண்ணறிவு ( AI ) மூலோபயத்திட்டத்தை வெளியிட்டுள்ளோம். அது தற்போது மக்களின் கருத்துக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. நெறிமுறை, நிலைபேண்தகு செயற்பாடு போற்றவற்றை செயற்கை நுண்ணறிவு ( AI ) உள்ளடக்கியுள்ளதை நாங்கள் உறுதி செய்கின்றோம். 

நாட்டில் விவசாயம், சுகாதாரத்துறை, கல்வி மற்றும் போக்குவரத்துத்துறையில் செயற்கை நுண்ணறிவை ( AI ) விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். செயற்கை நுண்ணறிவு ( AI ) தொடர்பில் மக்களுக்கு தேவையான அறிவுகளை வழங்கவுள்ளோம். குறிப்பாக பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு ( AI ) தொடர்பில் கற்பிக்கவுள்ளோம். தற்போது கடமைகளில் ஈடுபடுவோருக்கு பல்வேறு செயற்கை நுண்ணறிவு ( AI ) குறித்த சந்தர்ப்பங்களை உருவாக்கவுள்ளோம். இதனால் எமது தொழிற்துறைகளும் பொருளாதாரமும் வலுப்பெறுவதுடன் உறுதியடையும். அத்துடன் எமது இளைஞர்களுக்கும் எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியில் பல சந்தர்ப்பங்கள் உருவாகும்.  

டிஜிட்டல் மற்றத்தில் எவரும் பின்னிற்க முடியாது. அதனை செயற்படுத்துவதற்கான நேரம் தற்போது சரியாகிவிட்டது. இலங்கை செயற்கை நுண்ணறிவை ( AI ) பயன்படுத்த தயாராகிவிட்டதை தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாடு -2025 எடுத்துக் கூறுகின்றது.  செயற்கை நுண்ணறிவில் ( AI ) புரட்சியை ஏற்படுத்த நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். இலங்கை அதனை ஏற்படுத்துவதற்கு தயார். இலங்கையர்களுக்கு அதற்கான தகுதி, படைப்பாற்றல், பிரித்தாளும் திறன் உள்ளது என்பதை நாம் நம்புகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வழக்கு விசாரணைகள் அதிகரிப்பதே நீதிமன்ற கட்டமைப்பு...

2026-08-14 19:29:50
news-image

மதுரையில் தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை உயர்ஸ்தானீகர்...

2026-08-14 20:11:09
news-image

எதிர்க்கட்சியை அடக்கும் சக்தி அரசாங்கத்திற்கு இல்லை...

2026-08-14 19:28:23
news-image

கூட்டுறவு முறைமையை சந்தையில் தீவிரமாகச் செயற்படும்...

2026-08-14 19:19:15
news-image

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் பல கோடி...

2026-08-14 18:21:34
news-image

செஞ்சோலை நினைவுத்தூபி எழுப்பப்படும் ; செஞ்சோலைப்...

2026-08-14 17:51:55
news-image

புதிதாகப் பொறுப்பேற்ற 52ஆவது படைப்பிரிவின் கட்டளைத்...

2026-08-14 18:28:53
news-image

எம் இனத்துக்கு எதிரான இனப்படுகொலைகள் அனைத்துக்கும்...

2026-08-14 18:25:58
news-image

அவசர தேவைகளுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய...

2026-08-14 17:19:31
news-image

2026ஆம் ஆண்டின் சிறந்த இணையத்தளத்துக்கான வெள்ளி...

2026-08-14 18:15:45
news-image

திருமண விழா முடிந்து திரும்பியபோது வெயங்கொடையில்...

2026-08-14 17:41:42
news-image

பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத்...

2026-08-14 19:30:43