ப்ரவிஸின் சாதனைமிகு சதத்தின் உதவியுடன் ஆஸி. உடனான ரி20 தொடரை தென் ஆபிரிக்கா சமப்படுத்தியது

12 Aug, 2025 | 10:01 PM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டார்வின், மராரா விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் டிவோல்ட் ப்ரவிஸ் குவித்த சாதனைமிகு சதத்தின் உதவியுடன் 53 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 தொடரை 1 - 1 என தென் ஆபிரிக்கா சமப்படுத்தியுள்ளது.

இப் போட்டியில் 22 வயதான ப்ரவிஸ், 41 பந்துகளில் சதம் குவித்தார். இதன் மூலம் சர்வதேச ரி20 போட்டி ஒன்றில் மிகக் குறைந்த வயதில் சதம் குவித்த தென் ஆபிரிக்க வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். அத்துடன் டேவிட் மில்லருக்கு அடுத்ததாக வேகமாக சதம் குவித்த இரண்டாவது வீரரானார். டேவிட் மில்லர் 2017ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிராக 35 பந்துகளில் சதத்தைப் பூர்த்திசெய்தார்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களைக் குவித்தது.

56 பந்துகளை எதிர்கொண்ட டிவோல்ட் ப்ரவிஸ் 12 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 125 ஓட்டங்களைக் குவித்தார்.

31 ஓட்டங்களைப் பெற்ற ட்ரைஸ்டனுடன் 4ஆவது விக்கெட்டில் 126 ஓட்டங்களை ப்ரவிஸ் பகிர்ந்தார்.

பந்துவீச்சில் பென் த்வாஷுய்ஸ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ளென் மெக்ஸ்வெல் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

219 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 17.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இதில் டிம் டேவிட் 50 ஓட்டங்க ளையும்   அலெக்ஸ் கேரி 26 ஓட்டங்களையும் அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கோபின் பொஷ் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் க்வேனா மஃபாக்கா 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: டிவோல்ட் ப்ரவிஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் சிக்ஸில் விளையாட  புளூ ஸ்டார் ...

2026-09-14 22:08:25
news-image

புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ்...

2026-09-14 14:18:46
news-image

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா...

2026-09-14 11:13:41
news-image

91.09 மீற்றர்! இலங்கையின் ரூமேஷ் பத்திரகே...

2026-09-14 09:51:50
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண சம்பியன்...

2026-09-14 05:36:19
news-image

றினோனை வீழ்த்தி முதல் சுற்றில் தோல்வி...

2026-09-13 21:10:41
news-image

சுப்பர் லீக்கில் முதல் சுற்றை வெற்றியுடன்...

2026-09-13 13:46:46
news-image

ஆசிய சம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா இலங்கை?...

2026-09-13 13:20:59
news-image

பாகிஸ்தானுடனான 3ஆவது டெஸ்டில் 8 விக்கெட்களால்...

2026-09-13 01:42:52
news-image

கலம்போ எவ்சியிடம் இரண்டு கோல்கள் பின்னிலையில்...

2026-09-12 20:21:54
news-image

பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட...

2026-09-12 03:07:12
news-image

ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட்டில்  பங்குபற்றவுள்ள...

2026-09-12 01:48:15