அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அதர்ஸ் 'எனும் திரைப்பத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை இயக்குநர்கள் வெங்கட் பிரபு - இரா. சரவணன், நடிகர் ஆர்யா, நடிகைகள் ஆண்ட்ரியா -ஐஸ்வர்யா ராஜேஷ் -வாணி போஜன் ,பாடலாசிரியர் விவேக் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அதர்ஸ் ' திரைப்படத்தில் ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், முனீஸ்காந்த், ஹரிஷ் பெராடி, மாலா பார்வதி ,ஜெகன் ,ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முரளி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது என்றும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM