'கொடி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நேரடியாக அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பர்தா 'எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பிரவீண் இயக்கத்தில் உருவாகி உள்ள ' பர்தா' எனும் திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், தர்ஷனா ராஜேந்திரன், சங்கீதா கிருஷ் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராக் மயூர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மிருதுல் சுஜித் சென் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட பெண் உணர்வுகளை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆனந்த் மீடியா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய்- ஸ்ரீனிவாசலு - ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 22 ஆம் திகதியன்று தமிழ்- தெலுங்கு -மலையாளம் -ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில் , '' கிராமத்தில் சுப்பு என்று பெண் கதாபாத்திரம் முகத்தை பர்தா கொண்டு மறைக்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறார். அருகில் இருக்கும் நகரத்தை சேர்ந்த இரு பெண்மணிகளின் அறிமுகமும், நட்பும் கிடைத்த பிறகு சுப்பு - பர்தா அணிவதில் இருந்து விடுதலை பெற வேண்டும் என திட்டமிடுகிறார். அவருடைய எண்ணத்திற்கு வெற்றி கிடைத்ததா ?இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை. சமூகத்தில் இன்றும் கூட பெண்கள் பர்தா அணிகிறார்கள். இது தொடர்பான பிற்போக்குத்தனங்களை சுட்டிக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , மாற்றத்திற்கான முன்னேற்றத்தை விவரிக்கவும் இப்படைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM