நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் 'பல்டி 'படத்தின் கேரக்டர் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

12 Aug, 2025 | 05:08 PM
image

சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் பிரபல நடிகரான சாந்தனு பாக்யராஜ் மலையாளத்தில் நடித்திருக்கும் 'பல்டி ' படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்றப் புகைப்படத்தையும், அதற்கான பிரத்யேக காணொளியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பல்டி ' திரைப்படத்தில் ஷேன் நிகாம், சாந்தனு பாக்யராஜ், அல்போன்ஸ் புத்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அலெக்ஸ் ஜே. புல்லிக்கல் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கபடி எனும் வீர விளையாட்டின் பின்னணியில் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் டி கே ஃபிரேம்ஸ் மற்றும் வினு ஜார்ஜ் அலெக்சாண்டர் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் மற்றும் பிரத்யேக காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் சாந்தனு பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மற்றும் அதற்கான பிரத்யேக காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  இது ரசிகர்களை விட திரையுலக வணிகர்களை மட்டுமே கவர்ந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்றி தெரிவித்த சூர்யா!

2026-08-16 11:12:29
news-image

மகுடம் - திரைப்பட விமர்சனம்

2026-08-15 16:27:02
news-image

ராகவ் ரங்கநாதன் நடிக்கும் 'பீப் '...

2026-08-15 16:29:50
news-image

துஷ்யந்த் நடித்திருக்கும் 'ஆல் பாஸ்' படத்தின்...

2026-08-15 19:13:44
news-image

அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-08-15 15:43:22
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பாரீஸ் கஃபே'...

2026-08-15 15:45:02
news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56