(இராஜதுரை ஹஷான்)
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எவரும் சூழ்ச்சி செய்யவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு குறிப்பிட்ட போலியான வாக்குறுதிகள் மற்றும் வெறுப்புக்கள் அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும். நாட்டு மக்கள் வெகுவிரைவில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் அரசாங்கத்தை வீழ்;த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
குறைகளையும், விமர்சனங்களையும் தாங்கிக்கொள்ளும் மனநிலை ஜனாதிபதிக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ கிடையாது. அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எவரும் சூழ்ச்சி செய்யவில்லை.
ஆட்சிக்கு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு குறிப்பிட்ட போலியான வாக்குறுதிகள் மற்றும் வெறுப்புக்கள் அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும்.நாட்டு மக்கள் வெகுவிரைவில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைவார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மகன்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி காலங்களில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. அந்த குற்றச்சாட்டுக்கள் பொய் என்று அவர்களே குறிப்பிடும் காலம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. செயற்கைகோள் திட்டம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய உண்மை பாராட்டத்தக்கது என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM