வேலணையில் திருடப்பட்ட கால்நடைகளை இறைச்சியாக்கி விற்ற சந்தேகநபர்கள் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைப்பு

12 Aug, 2025 | 02:41 PM
image

வேலணை பிரதேசத்தில் கால்நடைப் பண்ணையாளர்களின் வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுசென்று விற்பனை செய்துவந்த சந்தேகநபர்கள்  வேலணை வங்களாவடியில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நயப்புடைக்கப்படு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்து.

இச்சம்பவத்தின்போது 20 வயதுடைய இளைஞன் ஒருவரே பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,

வேலணை பிரதேசத்தில் அண்மைக் காலமாக பெறுமதிமிக்க வளர்ப்புக் கால்நடைகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பண்ணையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வரும் நிலை காணப்படுகின்றது.

இதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைபாடுகள் செய்தும் திட்டமிட்ட இந்த திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் பெரும் சவால் இருந்து வந்தது.

இதையடுத்து பொதுமக்கள் தமது கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த  வேலணைக்கு வரும் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் கண்காணிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை பட்டா ரக வாகனம் ஒன்றில் 5 பேரடங்கிய சந்தேகநபர்களுடன்  வங்களாவடிப் பகுதியில் நடமாடியதை அவதானித்த மக்கள் குறித்த நபர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பியோட முயன்றுள்ளனர்.

நிலைமையை சுதாகரித்துக்கொண்ட மக்கள், பட்டா ரக வாகனத்தை மறித்து அதில் இருந்த ஒருவரை இறைச்சியுடன் பிடித்து நயப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

ஏனைய நால்வர் தப்பியோடிய நிலையில் பொலிஸார் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பாதாள உலகக்...

2026-09-05 12:58:03
news-image

22ஆவது திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டுசெல்ல...

2026-09-05 11:58:20
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-05 12:00:33
news-image

2029-2030க்குள் கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்...

2026-09-05 11:30:36
news-image

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீவிர...

2026-09-05 11:30:05
news-image

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட...

2026-09-05 11:28:44
news-image

கெப்பித்திகொல்லாவயில் காட்டு யானை தாக்கி இருவர்...

2026-09-05 11:38:53
news-image

பால் தேநீர் மற்றும் தேநீரின் விலை...

2026-09-05 11:21:34
news-image

தொம்பே பகுதியில் 75 லீற்றர் சட்டவிரோத...

2026-09-05 11:18:09
news-image

வாழ்வாதாரம் பறிபோகும் அபாயத்தில் இளம் சாரதிகள்!...

2026-09-05 11:08:02
news-image

மிஹிந்தலையில் கைவிடப்பட்ட பொதியிலிருந்து T56 துப்பாக்கி...

2026-09-05 10:34:27
news-image

கியூ.ஆர் முறையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்:...

2026-09-05 10:18:34