97 சிகரங்களுக்கு மலையேற்றம் செய்ய இலவச அனுமதி வழங்கும் நேபாளம்

Published By: Digital Desk 3

12 Aug, 2025 | 12:04 PM
image

தொலைதூரப் பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இமயமலையில் 97 சிகரங்களுக்கு மலையேற்றம் செய்ய இலவச அனுமதியை நேபாளம் வழங்கவுள்ளது.

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்துக்கு மலையேற்றம் செய்வதற்கான அனுமதி கட்டணம் செம்டெம்பர் மாதம் முதல் 15,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கவுள்ளதால் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த கட்டணம் சுமார் ஒரு தசாப்தம் கடந்து முதல் முறையாக அதிகரிப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக "வெளிகொணரப்படாத சுற்றுலா தளங்களை" முதன்மைப்படுத்தப்படும் என நேபாள சுற்றுலாத்துறை எதிர்பார்க்கிறது.

உலகின் 10 உயரமான மலைகளைக் கொண்ட நேபாளத்திற்கு மலையேற்றம் ஒரு குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டி தருகிறது.

கடந்த ஆண்டு மலையேற்றம் கட்டண வருமானம் 5.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாகக் கிடைத்துள்ளது. அதில் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து முக்கால்வாசிக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது.

கட்டணங்களுக்கு சலுகை வழங்கப்படும் சிகரங்கள் நேபாளத்தின் கர்னாலி மற்றும் சுதுர்பாசிம் மாகாணங்களில் அமைந்துள்ளன. அவை 5,970 மீற்றர் (19,590 அடி) முதல் 7,132 மீற்றர் வரை உயரம்  கொண்டவை ஆகும்.

நேபாளத்தின் தொலைதூர மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குறித்த இரண்டு மாகாணங்களும் நாட்டின் ஏழ்மையான மற்றும் வளர்ச்சியடையாத மாகாணங்களில் ஒன்றாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை...

2026-07-21 15:50:13
news-image

கயானா படகு விபத்து; 27 பேரின்...

2026-07-21 11:41:07
news-image

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு; 20...

2026-07-21 10:34:42
news-image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் -...

2026-07-21 10:32:37
news-image

வியட்நாமில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த பஸ்...

2026-07-21 10:17:03
news-image

பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் அண்டி பர்ன்ஹாம்

2026-07-20 17:26:16
news-image

இந்தியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி

2026-07-20 15:38:45
news-image

கயானாவில் 133 பயணிகளுடன் பயணித்த படகு...

2026-07-20 13:44:27
news-image

ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர்...

2026-07-20 12:49:18
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் உட்பட...

2026-07-20 11:53:27
news-image

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2026-07-20 11:44:52
news-image

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ;...

2026-07-20 10:19:23