துணுக்காய் பிரதேச செயலகம் முன் நபர் ஒருவரின் போராட்டம்

Published By: Vishnu

12 Aug, 2025 | 01:46 AM
image

துணுக்காய் பிரதேச செயலகம் முன்னால் நபரொருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

துணுக்காய் பிரதேச செயலகம் தனியார் முதலாளிகளிடம் இருந்து இதுவரை இலஞ்சமாக பெற்ற அனைத்தையும் மீள கையளிக்க வேண்டும்.

பிரதேச செயலக ஆளுகைக்குள்ள மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படவேண்டும்.

2017ம் ஆண்டு வரட்சி நிவாரணம் வழங்கியமை தொடர்பில் அதன் தெரிவு பட்டியல் தொடர்பிலும் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் நீதியானதும் நியாயமானதுமான விசாரணை மேற்கொள்ளவேண்டும்.

காணிப்பிணக்குகளை பாரபட்சமற்ற முறையில் தீர்க்கவேண்டும் மற்றும் காணிகள் வழங்கப்படவேண்டும்.

கிராம அலுவலர் திருமதி கிருஸ்ணரூபன் கலைச்செல்வியின் தண்டனை பணியிட மாற்றம் தொடர்பில் வெளிப்படையான விசாரியும் தீர்வும் வேண்டும் என்று கூறியே அவர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவரை பேச அழைத்த போது அவர் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இதேவேளை இது தொடர்பில் கருத்துரைத்த பிரதேச செயலாளர் ராமதாஸ் ரமேஸ் திருவாளர் கிருஸ்ணரூபன் இன்றையதினம் துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக சில விடயங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் ,அவர் குறிப்பிடுகின்ற விடயங்கள் அனைத்தும் எனது நிர்வாக காலப்பகுதியில் இடம்பெறவில்லை ,இது தொடர்பில் அவர் ஏற்கனவே ஜனாதிபதி செயலகம் ,பிரதமர் செயலகம் ,ஆளுநர் அலுவலகம் ,மாவட்ட செயலகம் உள்ளிட்ட திணைக்களங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைத்துள்ளார் ,இது தொடர்பிலான விசாரணைகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக மாவட்ட செயலாளருடைய புலனாய்வு பிரிவினரால் அது தொடர்பிலான ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலாளரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவர் தனது கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் செய்வது அவரின் ஜனநாயக உரிமையாக இருந்தாலும் அது தொடர்பில் விசாரணை முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதனை நான் கூற முடியாது.

அவர் போராட்டம் நடாத்துகின்ற இடத்துக்கு எமது உதவி பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தரை அனுப்பி வைத்து அழைப்பு விடுத்திருந்தேன் ஆனால் அவர் கதைப்பதற்கு உடன்பாடில்லை நான் கதைக்க விருப்பமில்லை என தெரிவித்திருந்தார்.

அவரின் கோரிக்கைகள் தொடர்பில் மாவட்ட செயலாளரை அணுகி அவரின் வேண்டுகோளை விரைவுபடுத்த முடியும் ,மேலும் இது தொடர்பிலான அறிக்கைகளை மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-12-17 06:13:15
news-image

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2025-12-17 01:32:44
news-image

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர்...

2025-12-17 01:29:18
news-image

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட, நீதிமன்றம்...

2025-12-17 01:03:01
news-image

அனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும்...

2025-12-17 00:59:49
news-image

'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் பற்றி மேல்மாகாண...

2025-12-17 00:52:57
news-image

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பொருளாதார நெருக்கடி...

2025-12-16 15:48:49
news-image

நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்த...

2025-12-16 16:45:04
news-image

குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள விசேட...

2025-12-16 22:09:31
news-image

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் எமது குரலை...

2025-12-16 17:18:15
news-image

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அழுத்தம் வழங்குங்கள்...

2025-12-16 17:03:11
news-image

அசோக ரன்வல தொடர்பில் கட்சி என்ற...

2025-12-16 17:17:30