(நெவில் அன்தனி)
எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் எஸ்.எல்.சி. ரி20 லீக் உள்ளூர் மும்முனை கிரிக்கெட் தொடரில் துனித் வெல்லாகே தலைமையிலான டீம் ப்ளூஸ் அணி தொடர்சசியான மூன்றாவது தோல்வியைத் தழுவியது.

தனது முதல் இரண்டு போட்டிகளில் டீம் க்றீன்ஸ் அணியிடம் 19 ஓட்டங்களாலும் டீம் க்றேஸ் அணியிடம் 24 ஓட்டங்களாலும் தோல்வி அடைந்த டீம் ப்ளூஸ் அணி, இன்று நடைபெற்ற டீம் க்றீன்ஸ் அணியுடனான இரண்டாம் சுற்று போட்டியில் 72 ஓட்டங்களால் மீண்டும் தோல்வி அடைந்தது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட டீம் க்றீன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் கமிந்து மெண்டிஸ் 50 ஓட்டங்களையும் சாமிக்க கருணாரட்ன ஆட்டம் இழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
அவர்களைவிட பானுக்க ராஜபக்ஷ 20 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அக்கில தனஞ்சய 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டில்ஷான் மதுஷன்க 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
159 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டீம் ப்ளூஸ் அணி 15 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 86 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
தனஞ்சய டி சில்வா (18), ரவிந்து பெர்னாண்டோ (16), அக்கில தனஞ்சய (16 ஆ.இ.) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
குசல் ஜனித் பெரேரா 6 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற்றார்.
பந்துவீச்சில் துஷான் ஹேமன்த 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சாமிக்க கருணாரட்ன 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM