மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் முகமூடி அணிந்து வந்த இளைஞன் ஒருவர் 13 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த சிறுமி நேற்று இரவு ஆலய உற்சவத்திற்கு தனது சகோதரி மற்றும் சகோதரியின் கணவருடன் சென்று நள்ளிரவு வீடு திரும்பியவர் வீட்டின் கதவை பூட்டாது நித்திரைக்கு சென்றுள்ளனர். இந் நிலையில்  இன்று அதிகாலை 2 மணியளவில் முகத்தை மூடி கொண்டு வீட்டிற்குள் உட்புகுந்து சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சிறுமியை கத்த விடாமல் பலாத்காரமாக தூக்கிகொண்டு வெளியில் செல்லும் வேளையில் சிறுமியின் சகோதரி கண்டு கூச்சலிட்டுள்ளார்.

இவரின் கூச்சலை கேட்டு கூடிய அயலவர்கள் குறித்த சிறுமியை தேடியுள்ளனர். சிறிது நேரத்தின் பின்னர் சிறுமி அருகிலுள்ள குளக்கட்டுப்பகுதியில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியை காப்பாற்ற சம்பவ இடத்திற்கு மக்கள் சென்ற வேளை குறித்த முக மூடி அணிந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியதாக சிறுமியை காப்பாற்றிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாங்கேணியைச்சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.