துல்கர் சல்மான் நடிக்கும் 'காந்தா' படத்தின் அப்டேட்

11 Aug, 2025 | 06:00 PM
image

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' காந்தா ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'பனிமலரே ' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'காந்தா 'திரைப்படத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்கிய ஸ்ரீ போர்சே, ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் டானி சான்சே லோபஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜானு சந்தர் இசையமைத்திருக்கிறார்.

திரையுலக பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேஃபரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஸ்பிரீட் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இது வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், மலையாளம் , தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ' ஹே பனிமலரே..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் குட்டி ரேவதி எழுத, பின்னணி பாடகர் பிரதீப் குமார் மற்றும் பின்னணி பாடகி பிரியங்கா என் கே ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கருப்பு வெள்ளை காலகட்டத்தில் திரையுலக பின்னணியில் ஒலிக்கும் இந்தப் பாடல் அந்த காலகட்டத்திய இசையை பிரதிபலிப்பதால் ஒரு பிரிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49
news-image

கடவுள் தந்த பரிசு' படத்தில் மூலம்...

2026-09-07 16:26:51
news-image

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய...

2026-09-07 16:24:36
news-image

தனுஷின் 'ஓம் 'திரைப்படத்தில் நடிக்கும் மம்முட்டியின்...

2026-09-07 16:24:25
news-image

இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்த மாரி...

2026-09-07 16:24:03
news-image

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் நடிக்கும் 'ஜெடூசி'...

2026-09-07 16:04:00
news-image

ஐ அம் கேம் - திரைப்பட...

2026-09-06 14:07:06
news-image

பட மாளிகையில் வெளியாகும் 'வைல்டு தமிழ்நாடு'...

2026-09-05 16:44:13
news-image

விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2'...

2026-09-05 16:35:20