ஹெயர் டிரான்ஸ்பிளான்டேசன் எனும் முடி மாற்று சத்திர சிகிச்சையை எப்போது மேற்கொள்ளலாம்..?

11 Aug, 2025 | 05:43 PM
image

இன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் தங்களது தோற்றப்பொலிவிற்கு அதீத முக்கியத்துவம் வழங்கி வருகிறார்கள். சிக்ஸ் பேக் தோற்றம் இருந்தாலும் அவர்களுடைய சிகை அலங்காரத்திற்கு கூடுதல் கவனம் அளிக்கிறார்கள்.

சிக்ஸ் பேக் தோற்றம் இருந்தாலும்... கவர்ச்சிகரமான முகம் இருந்தாலும் ... காந்தம் போன்ற கண்கள் இருந்தாலும்... சீரான புருவமும்.. அளவான நெற்றியும்... புன்னகை சிந்தும் அளவான இதழ்கள் இருந்தாலும்... உங்களது தலையில் தலைமுடி என்பது இயல்பான அளவை விட சற்றுக்குறைந்திருந்தாலும் மனதளவில் பாரிய பாதிப்பை உண்டாக்கிவிடும்.

தலைமுடி உதிர்வு என்பது சிலருக்கு பாரம்பரிய குறைபாடாக இருந்தாலும் பொதுவாக முடி மாற்று சத்திர சிகிச்சை என்பது இருபது வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் மேற்கொள்ளலாம் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதே தருணத்தில் ஆண்களாக இருந்தாலும்  பெண்களாக இருந்தாலும் அறுபது வயது வரையிலும் முடி மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்வதற்கு தகுதியானவர்கள் என சுகாதாரத்துறை பரிந்துரைக்கிறது.

எனவே இருபது வயதிற்கு மேற்பட்ட மற்றும் அறுபது வயதிற்குட்பட்ட ஆண்- பெண் என இரு பாலினத்தவர்களும் முடி உதிர்வு சிகிச்சைக்காக முடிமாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

அதே தருணத்தில் எம்மில் சிலருக்கு முடி மாற்று சத்திர சிகிச்சை மேற்கொண்ட பிறகும் முடி உதிர்வு ஏற்படுமா? என சந்தேகத்தை வினாக்களாக எழுப்புகிறார்கள். சிலருக்கு முடி மாற்று சத்திர சிகிச்சையின் போது பதியமிடப்பட்ட முடிகள் விவரிக்க இயலாத பல காரணங்களால் மீண்டும் அவை உதிரக்கூடும்.

இதற்கான துல்லியமான காரணத்தை அவதானித்து அதன் பிறகு அதற்குரிய பிரத்யேக சிகிச்சையை மேற்கொண்டு மீண்டும் சிறிய அளவிலான முடி மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொண்டால்... அவர்களுக்கு சிகை அலங்காரம் மற்றும் தலைமுடி உதிர்வு பிரச்சனையில் இருந்து முழுமையான நிவாரணத்தை பெற இயலும்.

வைத்தியர் :சிவக்குமார் தொகுப்பு :அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48