புதுமுக நடிகர் தருண் விஜய் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'குற்றம் புதிது 'எனும் திரைப்படம் விபத்தால் ஏற்படும் விபரீதத்தை விவரிக்கும் படைப்பு என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில் உருவாகி வரும் 'குற்றம் புதிது' திரைப்படத்தில் தருண் விஜய் , சேஷ்விதா கனிமொழி, மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, துரை ராமச்சந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜாசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கரண் பி. கிருபா இசையமைத்திருக்கிறார். க்ரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி கே ஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தயாரிக்கப்பட்ட உணவை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது.
இது அவருடைய வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அத்துடன் அவர் மீது கொலை பழியும் சுமத்தப்படுகிறது. இதிலிருந்து நாயகன் எவ்வாறு மீள்கிறான்? என்பதை மையமாக வைத்து தான் இப்படத்தில் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது '' என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM