அனைவரையும் உள்வாங்கும் வளர்ச்சி மற்றும் கலாசார பன்முகத்தன்மை என்பவற்றைக் கொண்டாடும் - WINGS கொண்டாட்டம்

11 Aug, 2025 | 04:52 PM
image

WINGS திட்டம்  அனைவரையும் உள்வாங்கும் தொழில்முனைவு, பன்முகத்தன்மை மற்றும் சமூகத்தின் வளைந்து கொடுக்கும் ஆற்றல் என்பவற்றை கொண்டாடும் உயிர்த் துடிப்பு மிக்க ஓர் இரண்டு நாள் நிகழ்வாகும். அது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் (IndependenceArcade) ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் Chrysalis (கிரிசலிஸ்) அமைப்பின் அனுசரணையுடன் இந்நிகழ்வு நடைபெற்றது. 

இப்பன்முகத்தன்மை சந்தை அங்கு வருகை தருபவர்களுக்கு பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாட்டின் பல்வேறு பாகங்களைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில் முயற்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அதே போல அவர்களது அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது. மேலும், அது சமூக ஒருமைப்பாட்டுக்காக தனியார் துறை வழங்கி வரும் பங்களிப்புக்கள் குறித்த ஒரு உரையாடலில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்களையும் வழங்கியது. 

அதே வேளையில், பன்முக அரங்க நிகழ்வுகள் மற்றும் ஏனைய பரஸ்பர முன்முயற்சிகள் என்;பவற்றுக்கூடாக இலங்கையின் பன்முகத்தன்மை குறித்த புரிதலையும் அதன்கூடாக பெற்றுக் கொள்ள முடிந்தது. இலங்கையின் செழுமையான கலாசார மரபுரிமையை கொண்டாடும் விதத்திலும், அதன் பல்லின அமைப்பை மதித்துப் போற்றும் விதத்திலும் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன. 

மேலும் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலுமிருந்தும் கலை நிகழ்ச்சிகள், அரங்கு நாடக நிகழ்ச்சிகள், ஓவியம் வரைவதற்கான பன்முகத்தன்மை சுவர், திரைப்படக் காட்சிகள்,புகைப்படக் கண்காட்சி, சிறுவர் பகுதி என்பன நிகழ்வை அலங்கரித்தது. 

'பன்முகத்தன்மை இலங்கையின் ஒரு முதன்மையான சிறப்பம்சமாக இருந்து வருவதுடன், இந்த நிகழ்வு ஒரு சந்தைப்படுத்தல் நிகழ்விலும் பார்க்க வேறுபட்ட இயல்பைக் கொண்டுள்ளது அதாவது, அது பிணைப்பு, அங்கீகாரம் மற்றும் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் உரித்துணர்வு என்பவற்றின் ஒரு வெளியாக இருந்து வருகின்றது. 

உள்வாங்குதல் என்பது வெறுமனே நியாயம் சார்ந்த ஒரு விடயமல்ல - அது புத்தாக்கம், வளைந்து கொடுக்கும் திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை இயக்கும் நெம்புகோலாகும். பங்கேற்பதற்கும், பங்களிப்புச் செய்வதற்கும் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் பொழுது சமூகங்கள் சமாதானம் மற்றும் சௌபாக்கியம் என்பவற்றுடன் கூடிய எதிர்காலமொன்றை கட்டியெழுப்புவதற்கான தமது முழுமையான உள்ளார்ந்த ஆற்றலை பயன்படுத்திக் கொள்கின்றன என்கிறார் இலங்கை மற்றும் மாலை தீவுகள் என்பவற்றுக்கான ஐரோப்பிய யூனியன் தூதுவர் மாண்புமிகு கார்மென் மொரேனோ.

கலாநிதி ஃபெலிக்ஸ் நியூமன், இலங்கைகான ஜெர்மனிய தூதுவர் கூறுகையில்' உள்வாங்குதல் மற்றும் தொழில்முனைவாளர்களுக்கு தேவையான கருவிகளை அவர்களுக்கு வழங்குதல் என்பவற்றின் மூலம் இலங்கையின் தனியார் துறையும் நாட்டின் நிலையான சமாதானம் மற்றும் செழிப்பு நிலை என்பவற்றுக்குப் பங்களிப்புச் செய்யக் கூடிய ஆற்றலை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் உதவ முடியும் என்பதனை இக்கருத்துத்திட்டம் எடுத்துக் காட்டுகின்றது.

Chrysalis அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஷிக்கா குணசேன கருத்திட்டத்தின் தாக்கம் குறித்து பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். FICE கருத்திட்டம் அனைவரையும் உள்வாங்கும்  தொழில்முனைவின் நிலைமாற்ற அதிகாரத்தை எடுத்துக் காட்டியுள்ளது. 

அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி, சந்தைகள் மற்றும் வலையமைப்புக்கள் என்பவற்றை வழங்குவதன் மூலம் எவ்வாறு வலுவான தொழில்முயற்சிகளையும், வலுவான சமூகங்களையும் உருவாக்க முடியுமென்பதனை நாங்கள் இதற்கூடாக பார்த்திருக்கிறோம். 

இந்தக் கருத்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் இத்தருணத்தில் எமது தொழில்முனைவாளர்களின் வளைந்து கொடுக்கும் திறன் மற்றும் ஆக்கத் திறன் என்பவற்றையும், பல்வேறு கலாசாரங்களுக்கிடையில் அவர்கள் கட்டியமைத்திருக்கும் உறவுப் பாலங்களையும் நாங்கள் கொண்டாடுகிறோம்.

உள்ளுர் தொழில்முனைவாளர்களும்  இந்த இறுதி நிகழ்வு குறித்து ஆர்வத்துடன்  தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். FICE  கருத்திட்டத்தில் பங்கேற்றமை எனது வணிகத்தையும், எனது நம்பிக்கையையும் மாற்றியமைத்தது" என்கிறார் அக்குரஸ்ஸவை சேர்ந்த கலைஞரான நிலூகா தமயந்தி. 'நான் நாட்டின் ஏனைய பாகங்களைச் சேர்ந்த தொழில் முனைவாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதுடன், புதிய திறன்களையும் கற்றுக் கொண்டேன். 

இந்தக் கொண்டாட்ட நிகழ்வு எமது பயணங்களை பகிர்ந்து கொள்வதற்கும், ஏனையவர்களுக்கு செயலூக்கத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பையும் எமக்கு வழங்குகின்றது. மாத்தறையைச் சேர்ந்த தொழில்முனைவாளரான கன்சுல் மிஸ்;பா இப்படிச் சொல்கிறார்: FICE  கருத்திட்டத்திற்கூடாக நான் நவீன வணிக உத்திகளை கற்றுக் கொண்டதுடன், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் விருப்பத்துடன் உதவ முன்வருவதனை பார்த்தேன். இங்கு கொழும்பில் எமது உற்பத்திகளையும், கலாசாரங்களையும் அருகருகே காட்சிப்படுத்தும் இந்த நிகழ்வில் பங்கேற்பது குறித்து பெருமிதமடைகின்றேன். இக்கருத்திட்டம் எனது எதிர்காலத்துக்கான ஒரு புதிய நோக்கினை எனக்கு வழங்கியது.

WINGS நிகழ்வு அனைவரையும் உள்வாங்கும் சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் என்பவற்றை மேம்படுத்தும் (FICE) கருத்திட்டத்தின் கீழ் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதனைகளை கொண்டாடுகிறது. இத்திட்டத்தின் கீழ் 125 உள்ளுர் சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சிகளுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்துக்கு இலங்கையில் சமூக நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்பவற்றை பலப்படுத்தும் (FICE) நிகழ்ச்சித்திட்டத்துக்கூடாக ஆதரவு வழங்கப்பட்டதுடன், அதற்கு ஐரோப்பிய யூனியன் (EU) மற்றும் ஜேர்மன் சமஸ்டி வெளிநாட்டு அலுவலகம் என்பவற்றின் இணை நிதியுதவி கிடைத்தது. இந்த நிகழ்ச்சித்திட்டம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுடன் இணைந்து புஐணு அமைப்பினால் அமுல்படுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39
news-image

மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த...

2026-08-09 16:09:37
news-image

'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026' கலாசார,...

2026-08-09 14:47:40
news-image

இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்கு...

2026-08-08 14:48:42
news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31