யாழ் நல்லூரில் பகுதியில் வைத்து நேற்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் ஹேமரத்ன உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் உயிரிழந்துள்ள மெய்ப்பாதுகாவலர்  ஹேமரத்னவின் மனைவியின் காலில் நீதிபதி இளஞ்செழியன் விழுந்து இரு கை கூப்பி வணங்கி கதறி அழுதுள்ளார்.

தன்னுயிர் காத்த மெய்ப்பாதுகாவலரின் உயிரிழப்பினை தாங்கிக்கொள்ள முடியாமல் நீதிபதி இளஞ்செழியன் அழுதமை குறிப்பிடத்தக்கது.