யாழ் நல்லூரில் மேல் நீதி மன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட தீவிர வேட்டையின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை நல்லூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் பல குழுக்களாக பிரிந்து தேடல் வேட்டையிலும் மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குனசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.