நல்ல கொழுப்பு அதிகரித்து விரைவில் எடை குறைய இளநீர்

Published By: Robert

20 Jan, 2016 | 02:38 PM
image

உடல் சூட்டை தணிக்கும் இளநீரை வெயில் காலங்களில் மட்டும் குடிக்காமல் வாரத்திற்கு ஒருமுறையாவது குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இளநீர் குடிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. உடலின் நீர்சத்தை குறிப்பிட்ட அளவில் வைத்து கொள்கிறது.

உடலில் உள்ள சத்துகளை முழுவதுமாக இயங்க செய்வதற்கும், புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்வதற்கும் உதவுகிறது.

உடற்பயிற்சி செய்பவர்கள் இளநீர் அருந்துவதை, அன்றாட பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இளநீரில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துகள் மிகுதியாக உள்ளன. இதனால், இரத்த அழுத்தம், இருதயம் தொடர்பான பிரச்சனைகள் வரவிடாமல் தவிர்க்கிறது.

இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளவும் இளநீர் உதவுகிறது. உடலின் நல்ல கொழுப்பை அதிகரித்து, உடல் இயக்கத்தை சீர் செய்கிறது.

பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால், சிறுநீரகத்தில் கல் ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது.

இளநீர் குடிக்கும் பலர், தண்ணீரை மட்டும் குடித்து விட்டு உள்ளே இருக்கும் இளசான தேங்காயை அப்படியே விட்டு விடுகின்றனர். தண்ணீருக்கு இணையான சத்து, இந்த இளம் தேங்காயிலும் உள்ளது. பலர் இந்த தேங்காய் பருப்பை சாப்பிடுவது, கொழுப்பை வரவழைத்து விடும் என நினைக்கின்றனர்.

தேங்காய் பருப்பை அப்படியே சாப்பிடுவது, உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக, இரத்தத்தில் நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்க இது உதவுகிறது.

சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக உடல் எடை இருப்பவர்கள், தினசரி இளநீர் அருந்தி வந்தால், விரைவில் எடை குறையும்.

இத்தகைய பல பயன்களை கொண்ட இளநீரை, வாரத்துக்கு இருமுறையாவது அருந்தினால், பல்வேறு நோய் தாக்குதல்களில் இருந்து, உடலை பாதுகாக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கருவிழி மாற்று சத்திர சிகிச்சை...!?

2024-10-05 17:31:43
news-image

அறிவாற்றல் குறைபாடு பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-10-04 17:07:05
news-image

ராப்டோமயோலிசிஸ் எனும் தசை திசு சிதைவு...

2024-10-01 16:55:55
news-image

எக்டோபிக் பீட்ஸ் எனும் சமச் சீரற்ற...

2024-09-30 17:00:57
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தட்டையான பாத...

2024-09-26 16:56:32
news-image

சர்க்கரை நோயால் செவித்திறன் பாதிப்பு ஏற்படுமா..?

2024-09-25 16:21:32
news-image

மூட்டு பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2024-09-24 17:58:19
news-image

சர்கோபீனியா எனும் தசை சிதைவு பாதிப்பிற்குரிய...

2024-09-23 17:07:13
news-image

கல்லீரல் அழுத்த பாதிப்புக்கான சிகிச்சை

2024-09-23 16:39:09
news-image

இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பை...

2024-09-20 02:54:17
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் 4...

2024-09-17 15:21:49
news-image

சிகெல்லா கேஸ்ட்ரோன்டிரிடிஸ் எனும் இரைப்பை குடல்...

2024-09-17 10:24:41