பொரளை துப்பாக்கிச் சூட்டுக்கு உடந்தையாக இருந்த மூவர் கைது !

11 Aug, 2025 | 09:39 AM
image

கொழும்பு, பொரளை, சஹஸ்புர பகுதியில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மூன்று சந்தேக நபர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை மற்றும் தெமட்டகொடவைச் சேர்ந்த 24, 25 மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒரு சந்தேக நபர் முன்னதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், தற்போது மூன்று நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற நிலையில், இதில் காயமடைந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர், அவர்களில் இருவர் தற்போது உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து சுமார் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்தோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-08 06:16:04
news-image

ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை: சிறைச்சாலை...

2026-08-08 06:14:24
news-image

துஷ்பிரயோக நோக்கங்களைக் கொண்ட நபர்கள், கைதிகளை...

2026-08-08 06:11:13
news-image

ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத்...

2026-08-08 05:45:32
news-image

மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின்...

2026-08-08 05:42:37
news-image

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு...

2026-08-07 12:20:20
news-image

சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர பிரதிப்...

2026-08-07 23:54:30
news-image

சிறைச்சாலை வன்முறைகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியா?...

2026-08-07 16:08:47
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் எனக்கு எதிராக...

2026-08-07 14:52:22
news-image

சத்துருக்கொண்டான் படுகொலை முறைப்பாட்டாளரை சிஐடி அழைப்பது...

2026-08-07 15:14:41
news-image

சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த சதி: அமைச்சர்...

2026-08-07 16:07:58
news-image

விலை அதிகரிப்புக்கு மத்தியில் அரசின் சமூக...

2026-08-07 15:06:00