(நெவில் அன்தனி)
இந்தியாவின் புபணேஸ்வர் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற இந்திய பகிரங்க உலக மெய்வல்லுநர் வெண்கல முத்திரை சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தேசிய சாதனை நிலைநாட்டிய ருமேஷ் தரங்க, உலக மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்ற நேரடி தகுதிபெற்றார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 86.50 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்ததன் மூலம் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.

இதன் மூலம் தியகமவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய தேர்வு போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சுமேத ரணசிங்க நிலைநாட்டிய 85.78 மீற்றர் என்ற சாதனை முறியடிக்கப்பட்டது.
4 x 400 தொடர் ஓட்டத்தில் இலங்கைக்கு தங்கம்

ஆண்களுக்கான 4 x 400 தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணியினர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர்.
அப் போட்யை 3 நிமிடங்கள், 08.22 செக்கன்களில் இலங்கை அணியினர் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர்.
தங்கப் பதக்கம் வென்ற இலங்கையின் 4 x 400 மீற்றர் தொடர் அணியில் ஒமெல் டி சில்வா, சதேவ் ராஜகருண, இமேஷ் திஸ்மித்த, கல்ஹார இந்துப்ப சில்வா ஆகியோர் இடம்பெற்றனர்.
அவர்களில் சதேவ் ராஜகருண (குருநாகல், சேர் ஜோன் கொத்தலாவல பாடசாலை), ஒமெல் டி சில்வா (கந்தானை புனித செபஸ்தியார்), கல்ஹார இந்துப்ப (கோட்டே, ஆனந்த சாஸ்த்ராலயா) ஆகியோர் பாடசாலை மாணவர்களாவர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM