மூத்ததம்பி கோபபலரெத்தினத்தின் மணிவிழா புத்தக வெளியீடு

10 Aug, 2025 | 09:10 PM
image

இலங்கை நிருவாக சேவை விசேடதரத்திலுள்ள அமைச்சின் முன்னாள் செலாளர் மூத்ததம்பி கோபபலரெத்தினத்தின் மணிவிழா புத்தக வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (10) மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

ஓய்வுநிலை சிரேஸ்ட இலங்கை நிருவாக சேவையாளர் கலாநிதி சி.அமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பி.தயாநந்தன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.ஜே.அதிசயராஜ்,  புணர்வாழ்வு அமைச்சின் ஓய்வு நிலை மேலதிக செயலாளர் சி.பாஸ்கரன்,  மற்றும் அரச உயர் அதிகாரிகள், இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள், ஓய்வு நிலைய அதிகாரிகள், கவ்வியலாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், என பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மூகோவின் 40 வருட அரச சேவையின் தடங்கல், மற்றும் இலங்கையின் சமூகப் பொருளாதார அரசியல் நிலமைகளின் சமகாலப் போக்குகள் எனும் இரு நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டன.

மணிவிழா சிறப்பு மலர்களுக்கான ஆய்வுரைகளை கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் வேலுப்பிள்ளை குணரெத்தினம், மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் க.அனிரன் நிகழ்த்தினர்.

இலங்கை நிருவாக சேவை விசேடதரத்திலுள்ள அமைச்சின் முன்னாள் செலாளர் மூத்ததம்பி கோபபலரெத்தினத்தின் சேவையைப் பாராட்டி இதன்போது பொன்னாடை போர்த்தியும், வாழ்த்து மடல் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குரலற்ற சமூகங்களின் கதைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்...

2026-07-20 17:44:55
news-image

கவனிக்கப்படாத மக்களின் வாழ்வியலை வெளிச்சமிடும் 'UNCOVER'...

2026-07-20 17:37:50
news-image

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை...

2026-07-20 15:28:33
news-image

கொட்டகலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

2026-07-19 11:25:07
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36