(துரைநாயகம் சஞ்சீவன்)
போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் நேற்று (09) சனிக்கிழமை திருகோணமலை ஆனந்த பிரகதீஸ்வரா கலாலயாவில் பரதக்கலையின் சில படிநிலைகளை பயின்றிருந்தார்.
போலந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த தோமஸ் ஜொயன்னா தம்பதியினர் நடன ஆசிரியர் மேனகா பாக்கியராஜாவின் வழிநடத்தலில் அவருடைய மாணவிகளுடன் இணைந்து நடனக்கலையை பயின்றனர்.
தமிழர்களின் கலை, கலாச்சார பண்பாடுகளில் தாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தங்களைப் போன்று பலரும் பரதக்கலையை பயில மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறித்த வெளிநாட்டு தம்பதியினர் தெரிவித்திருந்தனர்.
இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இலங்கை மக்களுடைய குறிப்பாக தமிழர்களுடைய வாழ்வியலில் ஆர்வம் காட்டி வருவதாகவும் பெண்கள் தங்களுக்கான மணமகன்களைக்கூட இலங்கையில் தேடுவதாகவும் சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இதுபோன்ற கலைகளை சுற்றுலாத்துறையுடன் இணைப்பதன் மூலம் சுற்றுலாத்துறையில் அதிக வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM