தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை பொழுதுபோக்கு நிகழ்ச்சி போல் உள்ளது - வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

10 Aug, 2025 | 04:44 PM
image

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கும் அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்கும் பேச்சுவார்த்தை தற்போதைய அரசாங்கம் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாகவே எடுத்துக்கொண்டுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  வேலுசாமி இராதாகிருஷ்ணன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய ஜனாதிபதி மேதின கூட்டத்திலும் சரி பாராளுமன்றத்திலும்  மற்றும் பல்வேறு பொது கூட்டங்களில் கலந்துகொண்டு சம்பள அதிகரிப்பை பற்றி பேசினாலும் இன்று வரை அது கைகூடவில்லை.

மேலும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தினது பேச்சாளர் ரொஷான் ராஜதுரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உற்பத்தி அடிப்படையில் மாத்திரமே வேதன அதிகரிப்பொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அல்லது மீண்டும் அரசுக்கு தோட்டங்களை கையளிக்க வேண்டும் என அலட்சியமான பதில்களை தெரிவிக்கின்றனர் .

தற்போது சாதாரண அரிசி ஒரு கிலோ 250 ரூபாவை கடந்து  போகிறது இந்நிலையில் எமது தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றன.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,350 ரூபாவை அடிப்படை சம்பளமாக மாத்திரம் வழங்க சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் தீர்மானித்து வழங்கி வருகிறது அத்துடன் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்ட ஆயிரத்து 700 ரூபாய் சம்பளம் தமக்கு வழங்கப்படவில்லை என பல பெருந்தோட்ட தொழிலாளர்கள் விசனம் தெரிவித்து வருகின்றதும் தொடர் கதையாகவே உள்ளது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது...

2026-08-08 14:56:36
news-image

இரத்மலானையில் ஆயுதங்கள், கைக்குண்டு மற்றும் பணத்துடன்...

2026-08-08 14:36:20
news-image

பதுளையில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில்...

2026-08-08 13:20:57
news-image

உயர்தர பரீட்சார்த்திகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...

2026-08-08 13:56:21
news-image

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்

2026-08-08 13:51:43
news-image

கட்டானையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்...

2026-08-08 13:20:07
news-image

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர்...

2026-08-08 13:47:48
news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51