வவுனியா செட்டிகுளம் பிரதேசத்துக்கு உட்பட்ட முகத்தான் குளம் பாடசாலையினுடைய 65 ஆவது ஆண்டு விழாவும் முகமலர் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றுள்ளது.
1960 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வவுனியா முகத்தான் குளம் அ.த.க பாடசாலையினுடைய 65 ஆவது ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
அதாவது கடந்த 1960ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடயானது கடந்த 1990 களுக்கு பின்னர் ஏற்ப்பட்ட யுத்தம் காரணமாக இங்கிருந்த மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்து மீளவும் 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் மீளவும் சொந்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து கற்பித்தல் செயலபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் 65வது ஆண்டினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் முன்னதாக பாடசாலையினுடைய முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பிரதம விருந்தினர்கள் மங்கள வாத்திய இசை மற்றும் மாணவர்களின் கோலாட்டம் ஆகியவற்றுடன் அழைத்து வரப்பட்டு பிரதான நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டதை யடுத்து மண்டப நிகழ்வுகள் நடைபெற்றன.
தொடர்ந்து இப்பாடசாலை கடமையாற்றிய முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் என பலர் கௌரவிக்கப்பட்டதுடன் இப்பாடசாலையினுடைய வரலாறுகளையும் பல்வேறு ஆக்கங்களையும் தாங்கிய முகமலர் என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதில் கல்வியலாளர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM