பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான அடிப்படையாக தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவு திகழ்கிறது - பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவிப்பு

10 Aug, 2025 | 09:57 AM
image

(நா.தனுஜா)

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவானது சுமார் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பிராந்திய ஸ்திரத்தன்மை, பொருளாதார மேம்பாடு, பாரம்பரிய கலாசார பகிர்வு என்பவற்றுக்கான அடிப்படையாகத் திகழ்வதாக வெளிவிவகார, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவு (ஆசியான்) தின நிகழ்வை முன்னிட்டு இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் டெவி கஸ்டினா ரொபிங், இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைற்றூன் மஹபன்னபோன், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி ராம், இலங்கைக்கான மியன்மார் தூதுவர் டௌ மார்லர் தான் டைக் ஆகியோருடன் இணைந்து இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் அடமினால் வெள்ளிக்கிழமை (08) கொழும்பிலுள்ள ஷங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துபசாரத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டிணைவானது சுமார் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பிராந்திய ஸ்திரத்தன்மை, பொருளாதார மேம்பாடு, பாரம்பரிய கலாசார பகிர்வு என்பவற்றுக்கான அடிப்படையாகத் திகழ்வதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு வர்த்தம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துவதற்கும், சமுத்திரப்பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கும், காலநிலைமாற்ற சவால்களை எதிர்கொள்வதற்கான இயலுமையை அதிகரிப்பதற்கும், மக்களுக்கு இடையிலான தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும் தெற்காசிய நாடுகளின் கூட்டிணைவுடன் மிகநெருங்கிப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு ஜனநாயகத்திற்கு...

2026-08-09 17:28:02
news-image

நாமல் ராஜபக்‌ஷக்கு சிறைச்சாலைகளில் அதிக வாக்குகள்:...

2026-08-09 17:51:42
news-image

தென் கொரியாவில் மத சுதந்திரம், கருத்துச்...

2026-08-09 22:16:45
news-image

அரசியலமைப்பு திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது...

2026-08-09 17:53:18
news-image

மாகாண சபை தேர்தல் தாமதத்திற்கு எல்லை...

2026-08-09 17:56:52
news-image

எந்தவொரு வரைவு ஆவணமும் உருவாக்கப்படவில்லை: சிறிதரனுக்கு...

2026-08-09 17:53:01
news-image

நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல்...

2026-08-09 20:19:40
news-image

சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோதமாகப் பணியாற்றிய...

2026-08-09 18:04:26
news-image

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக...

2026-08-09 17:33:26
news-image

சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார், கட்டார்...

2026-08-09 17:16:31
news-image

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாயவில்...

2026-08-09 16:37:05
news-image

பொலிஸாரின் பெயரில் இணையவழி மோசடி ;...

2026-08-09 17:20:47