நடிகர் வெற்றி நடிக்கும் 'பிளாக் கோல்டு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

09 Aug, 2025 | 02:48 PM
image

தமிழ் திரையுலகில் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கான லாபத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் நடிகராக உயர்ந்து வரும் நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடித்து வரும் 'பிளாக் கோல்டு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் தீரன் அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'பிளாக் கோல்டு' படத்தில் வெற்றி மற்றும் நடிகை பிரியாலயா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்து வருகிறார்கள்.

இவர்களுடன் லிவிங்ஸ்டன், துளசி, 'பிக் பொஸ்' அபிராமி, இயக்குநர் ஏ. வெங்கடேஷ், விஜய் ரிவி ராமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் குமார் வீரசாமி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தை எம் எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். மூர்த்தி தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தருணத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் வெற்றியின் எக்சன் அவதாரத் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''நடுத்தர குடும்பத்தை சேர்ந்த படித்த இளைஞன் ஒருவன் தன் வாழ்வில் ஏற்பட்ட இழப்பிற்கான காரணத்தை  தேடுகிறான். உண்மையை கண்டறிந்ததும் அதற்கு காரணமான நிழல் உலக மாஃபியாக்களை அவர் எப்படி எதிர்கொண்டார்? என்பதை விறுவிறுப்பாக விவரிக்கும் வகையில் இப்படத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சூர்யா - ஜோதிகாவின் 20 ஆண்டுகால...

2026-09-16 15:31:09
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-16 14:01:19
news-image

விமல் நடிக்கும் 'சண்டக்காரி' படத்தின் முன்னோட்டம்...

2026-09-16 13:47:29
news-image

எம். எஸ். பாஸ்கர் நடிக்கும் 'ஃபீல்...

2026-09-16 13:50:23
news-image

நடிகர் விமல் - ஸ்ரேயா சரண்...

2026-09-15 15:08:53
news-image

நடிகை அஞ்சலி நாயரின் நடனத்தில் வெளியான...

2026-09-15 15:08:29
news-image

நடிகர் 'சியான்' விக்ரம் நடிக்கும் :'பவர்...

2026-09-15 14:59:36
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'தி கிராண்ட்...

2026-09-15 14:58:32
news-image

நடிகை கோமலீ பிரசாத் நடிக்கும் 'மண்ட...

2026-09-15 14:46:21
news-image

ராஷ்மிகா மந்தானா நடிப்பில் திரைப்படமாகும் 'பாரத...

2026-09-15 14:46:05
news-image

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தனி முத்திரை...

2026-09-15 14:43:55
news-image

கடலோர பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத...

2026-09-14 16:24:05