கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடி முருகவேல் விழா

Published By: Vishnu

08 Aug, 2025 | 08:56 PM
image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடி முருகவேல் விழா வெள்ளிக்கிழமை (8) மாலை 4 மணிக்கு மஹா கணபதி ஹோமம் மற்றுமு் மாலை 6 மணிக்கு வரலக்ஷி திருவிளக்குப் பூஜையுடன் ஆரம்பமாகியது.

சனிக்கிழமை (9) காலை 7 மணிக்கு பன்னீர்காவடி, கட்டி முத்திரை திரித்து, அபிஷேகத்திற்குரிய பால்குடம் எடுத்து, வீதிவலம் வந்து மூலவருக்கும், ஸ்ரீ சண்முகப்பெருமானுக்கும் விஷேட ஸ்நபனாபிஷேகமும், விசேட அலங்கார சிறப்பு பூஜையும் நடைபெற்று அதனைத் தொடர்ந்து உச்சிகால பூஜை, மகேஸ்வர பூஜையும் நடைபெறும்.

அன்றையதினம் மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகப்பெருமானுக்கு விசேட சண்முகார்ச்சனை நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை (10) காலை 6 மணிக்கு தேர்த்திருவிழா இடம்பெறவுள்ள நிலையில், காலை 4 மணிக்கு மூலவருக்கு  ஸ்நபனாபிஷேகம் இடம்பெற்று காலை 6 மணிக்கு வசந்த மண்டபத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று,சுவாமி கோலாகலமாய் சித்திர இரதத்தில் எழுந்தருளி, வெளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து இன்னருள் புரிவார்.

ஜிந்துப்பிட்டி தெரு, மேட்டுத்தெரு, ஆட்டுப்பட்டித்தெரு, கபூஸ் லேன், சென். ஜோன்ஸ் வீதி, மெயின் வீதி, 5 ஆம் குறுக்குத்தெரு, நொறிஸ் ரோட், 4 ஆம் குறுக்குத்தெரு, கெய்சர் வீதி, பூந்தோட்ட வீதி, மெயின் வீதி, செட்டியார் தெரு, ஸ்ரீ கதிரேசன் வீதி, ஆண்டிவால் தெரு, கன்னாரத்தெரு, ஜிந்துப்பிட்டித்தெரு வழியாக திருக்கோயிலை தேர் வந்தடையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44
news-image

104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில்...

2026-07-05 09:50:08
news-image

புனித பிரிஜட் கொன்வென்ட்டின் 125ஆம் ஆண்டு...

2026-07-05 11:56:27
news-image

கொழும்பில் இடம்பெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது...

2026-07-05 12:58:18
news-image

அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவு:...

2026-07-03 09:45:08