(நெவில் அன்தனி)
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற இரண்டாவது எஸ்எல்சி ரீ20 லீக் (SLC T20 League) உள்ளூர் மும்முனை கிரிக்கெட் போட்டியில் டீம் ப்ளூஸ் அணியை 24 ஓட்டங்களால் டீம் க்றேஸ் அணி வெற்றிகொண்டது.
ஆரம்ப நாளான நேற்றைய தினம் க்றீன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த ப்ளூஸ் அணி, இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக ஏமாற்றம் அடைந்துள்ளது.

இன்றைய போட்டியில் நுவனிது பெர்னாண்டோ குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம், அணித் தலைவர் சரித் அசலன்க குவித்த அரைச் சதம், ஏஷான் மாலிங்க, பினுர பெர்னாண்டோ ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு என்பன க்றேஸ் அணியை வெற்றி அடையச் செய்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட டீம் க்றேஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.
இப் போட்டியில் ஆரம்ப வீரராக களம் இறங்கிய தினேஷ் சந்திமால் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். நிரோஷன் திக்வெல்ல 11 ஓட்டங்களுடன் வெளியேறினார். (15 - 2 விக்)
ஆனால், திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நுவனிது பெர்னாண்டோ, இரண்டு இணைப்பாட்டங்களில் மொத்தமாக 172 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார்.
முதல் இரண்டு விக்கெட்கள் 15 ஓட்டங்களுக்கு வீழ்ந்த பின்னர் 3ஆவது விக்கெட்டில் லஹிரு உதாரவுடன் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்த நுவனிது பெர்னாண்டோ தொடர்ந்து 4ஆவது விக்கெட்டில் சரித் அசலன்கவுடன் மேலும் 122 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

லஹிரு உதார 24 பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களையும் சரித் அசலன்க 34 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
நுவனிது பெர்னாண்டோ 52 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 70 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா, அக்கில தனஞ்சய, டில்ஷான் மதுஷன்க, மதீஷ பத்திரண ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
195 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டீம் ப்ளூஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
முதல் போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் பெத்தும் நிஸ்ஸன்க, விஷேன் ஹலம்பகே ஆகிய இருவரும் நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
பவர்ப்ளேயில் 2 விக்கெட்களை இழந்து 65 ஓட்டங்களைக் குவித்த டீம் ப்ளூஸின் ஓட்ட வேகம் அதன் பின்னர் குறைந்ததுடன் கடைசி 14 ஓவர்களில் 6 விக்கெட்களுக்கு 103 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றப்பட்டது.
பெத்தும் நிஸ்ஸன்க 20 ஓட்டங்களையும் விஷேன் ஹலம்பகே 18 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 35 ஓட்டங்களையும் குசல் ஜனித் பெரெரா 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
மத்திய வரிசையில் தசுன் ஷானக்க 31 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்களை விட தனஞ்சய டி சில்வா 17 ஓட்டங்களையும் அணித் தலைவர் துனித் வெல்லாகே ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களை பெற்றனர்.


பந்துவீச்சில் ஏஷான் மாலிங்க 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் பினுர பெர்னாண்டோ 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM