50 மீட்டர் நீச்சல் போட்டியில் 6 வயதான மாணவன் தினேஷ் ஹெதாவ் சாதனை 

08 Aug, 2025 | 06:05 PM
image

கொழும்பு - 13, சென் பெனடிக்ட் கல்லூரியில் கல்வி பயிலும் தரம் இரண்டைச் சேர்ந்த 6 வயது மாணவன் தினேஷ் ஹெதாவ், 50 மீட்டர்  நீச்சல் போட்டியில் (Freestyle Swimming) சாதனை படைத்துள்ளார்.

நேற்றைய தினம் கல்லூரி நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்வானது வெறும் 49 வினாடிகளில் 50 மீட்டர் தூரத்தைக் கடந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த சிறுவன் ஒருவனால் நிகழ்த்தப்பட்ட  முன்னைய சாதனையான 1 நிமிடம் 6 வினாடிகள் என்ற சாதனையை  முறியடித்து நிகழ்த்தப்பட்டது.

மேலும், இந்த சாதனையானது "சோழன் உலக சாதனைப் புத்தகம் (CBWR)" மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, சென் பெனடிக்ட் கல்லூரியில் சாதனை மாணவனைப் பாராட்டி ஒரு சிறப்புப் பாராட்டு விழாவும்  நடைபெற்றது. 

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சோழன் சாதனைப் புத்தகத்தின்  பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.  

அதனைத் தொடர்ந்து, மாணவனின் இந்த வெற்றிக்கு அவரது பெற்றோர்களான குணரத்னம் தினேஷ் மற்றும் சுதர்ஷனி மகேந்திரன் ஆகியோரும்  பயிற்சியாளர்கள் மற்றும் கல்லூரியின் நீச்சல் குழு ஆகியோர் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, மாணவன் ஹெதாவின் இந்த சாதனையானது "இலங்கையின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஓர் ஊக்கமளிக்கும் சாதனையாக  அமைந்துள்ளது" என கல்லூரி நிர்வாகத்தினரால் கருத்து தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07