யாழ்ப்பாணம் – மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு சமூகவலைத்தளங்களிலும் பிரபலமாக பேசப்படுகின்றது.

யாழ். மீசாலையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவருக்கும், ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமண பந்தத்தில் இணைந்த இருவரும் ஜேர்மன் நாட்டில் ஆங்கில ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றனர்.இவர்கள் திருமணம் நேற்று மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்திற்கு மாட்டு வண்டியில் வருகை தந்து தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணக் கோலத்தில் இருவரும் தம்பதிகளாக மாட்டு வண்டியில் செல்வதை அப்பகுதி மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்ததுடன், ஆச்சரியமடைந்துள்ளனர்.

குறித்த மணமகனுடன் வருகை தந்திருந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களும் தமிழர் பாரம்பரியத்துடன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.