(எம்.மனோசித்ரா)
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு சபாநாயகரால் நியாயமான காலம் வழங்கப்படாமை உட்பட முக்கிய காரணிகளை சுட்டிக்காட்டி சுவிஸர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள பாராளுமன்ற குழுக்களுக்கிடையிலான ஒன்றியத்திடம் முறைப்பாடளிப்பதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சிகளின் கட்சி தலைவர்கள் கூடிய போது சில விடயங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டு அதனை சபாநாயகரிடம் கையளிப்பதாகும்.
அடுத்தது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றும் போது ஆளுந்தரப்பினரால் இடையூறு ஏற்படுத்தப்படுவதோடு, சபாநாயகரால் முறையாக நேரம் வழங்கப்படாமை குறித்து முறைப்பாடளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து பாராளுமன்ற குழுக்களுக்கிடையிலான ஒன்றியத்திடம் முறைப்பாடளிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.
எதிர்க்கட்சி தலைவருக்கு மாத்திரமின்றி, எதிர்க்கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கும் உரிய நேரம் வழங்கப்படாமை குறித்தும் முறைப்பாடளிக்கவுள்ளோம். இவை மாத்திரமின்றி புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு வலியுறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான கையெழுத்து பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவற்றை நிறைவு செய்து அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுப்போம். நம்பிக்கையில்லா பிரேரணையில் அடுத்த வாரத்துக்குள் கையெழுத்துக்களைப் பெற்று கையளிப்போம். ஏனைய நடவடிக்கைகளும் ஓரிரு வாரங்களுக்குள் நிறைவடையும். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதற்காக ஒருங்கிணைப்பிற்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM